சிங்கப்பூரில் பாஸ்கள் அதிகாரப்பூர்வமானதா என்பதை சிங்கை மனிதவளத்துறை வெப்சைட்டில் செக் செய்து கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் அந்த வெப்சைட்களிலும் தற்போது ஏகப்பட்ட பித்தலாட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் உண்மையான MOM வெப்சைட்டினை தெரிந்து கொண்ட பிறகே விசா செக்கிங் செய்யுங்கள்.
வெளிநாட்டில் வேலைக்காக செல்லலாம் என்ற யோசனை வந்தவுடன் பலரின் லிஸ்ட்டில் இருக்கும் முதல் பெயர் சிங்கப்பூர் தான். ஏனெனில் சிங்கப்பூரில் அதிகமாக தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர். உங்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வு இங்கு இருக்கும். இத்தனை அழகுடைய சிங்கப்பூருக்கு வருவது என்னவோ பலருக்கு அத்தனை எளிதாக இருப்பது இல்லை. முதலில் ஒரு ஏஜென்ட்டை தேடி பிடிக்க வேண்டும். அவர் ஏமாற்றுபேர்வழியாக இருக்காமல் நல்ல வேலையை தேடி தர வேண்டும்.
அப்படி இருந்து விட்டால், ஏகப்பட்ட சோதனைகள் வரும். அதனால் எந்த ஏஜென்ட்டாக இருந்தாலும் எல்லா விஷயத்திற்கும் கேள்வி கேட்டு நன்கு ஆராய்ந்து தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் IPAஐ MOM இணையத்தளத்தில் செக் செய்து கொள்ள மறக்காதீர்கள். ஆனால் இங்கும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.
MOM வெப்சைட்டிற்கே நிறைய போலிகள் தற்போது உலா வருகிறது. அந்த போலி வெப்சைட்டில் கூட உங்களுக்கு போலி IPAஐ காட்டி ஏமாற்றவும் வாய்ப்பு உண்டு. சிங்கை மனிதவளத்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட் https://www.mom.gov.sg/ மட்டுமே. இந்த வெப்சைட் முகவரியை பார்த்து விட்டு உங்க விசாவினை செக் செய்யுங்கள்.
இப்படி இல்லாமல்,
https://www.mom-sg.org
https://www.mom-gov.com
https://www.ministryofmanpower.net
https://www.wponlinemomgov.sg.com
என்ற வெப்சைட்கள் அனைத்துமே போலியானது தான். இதுப்போன்ற பல போலி வெப்சைட்கள் momஆல் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இருந்தும் தொடர்ந்து இதைப் போன்ற இன்னும் பல போலி வெப்சைட்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனால் எப்போதும் கொஞ்சம் ஜாக்கிரதையாக நீங்க எந்த வெப்சைட்டில் இருக்கிறீர்கள் என்பதை செக் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், உண்மையான வெப்சைட் போன்றே இருப்பதால் முகவரியினை வைத்து மட்டுமே உங்களால் வித்தியாசத்தினை கண்டுப்பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.