சிங்கப்பூரில் டிகிரி படித்துவிட்டு பல்லாயிரம் சம்பளத்தில் வேலைக்கு செல்ல விரும்புவர்களுக்கு S Pass விசா கொடுக்கப்படும். அதை எப்படி வாங்கலாம் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்காக.
டிகிரி படித்தவர்களுக்கு கண்டிப்பாக S Pass ஈசியாக கிடைத்து விடும். ஏஜென்ட்டை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு பெரிய வேலையே இதில் தான். முழுக்க முழுக்க தெரிந்த ஏஜென்ட்டை இதற்காக தேர்வு செய்யுங்கள்.
உங்களின் சான்றிதழ்களை சிங்கப்பூரில் இருக்கும் ஏஜென்ட்களுக்கு அனுப்புவார்கள். நீங்கள் கேட்ட துறைகளில் வேலை இருந்தால் அந்த வேலை குறித்த தகவல்கள் உங்களுக்கு கூறப்படும். இதிலும் தீர ஆராய்ந்த பின்னர் பணம் கட்டும் வேலைகளை தொடங்குகள்.
S Passக்கு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சிங்கப்பூரின் பணத்தில் 4000 முதல் 6000 சிங்கப்பூர் டாலர் வரை கேட்கப்படுகிறது. இதில் 4.5 லட்சம் என்பது பெரும்பாலான ஏஜென்ட்கள் கேட்பதால் தாராளமாக இந்த தொகை கேட்போரை நம்பலாம்.
அதை தொடர்ந்து உங்களுக்கான நேர்காணல் கண்டிப்பாக நடத்தப்படும். சிங்கப்பூரில் இருந்து உங்களுக்கு போன்கால் வரும். அப்போது சத்தம் இல்லாத இடத்தில் இருந்து தைரியமாக பேசவேண்டியது முக்கியமாக பார்க்கப்படும். இதை தொடர்ந்து உங்க ஏஜென்ட் வேலைக்காக அப்ளே செய்வார்கள். ஒரே நாளில் MOM தளத்தில் அப்ளே செய்யப்பட்ட தகவல் காட்டப்படும். உங்களது பாஸ்போர்ட் எண்ணை போட்டு பார்த்தாலே அது உங்களுக்கு காட்டப்படும்.
அப்ளே செய்யப்பட்ட 4 வாரங்களுக்குள் S Pass விசா கிடைத்து விடும். அது கிடைக்கும் பட்சத்தில் காசு கட்டுவதற்கு முன்னரே முழுதாக படித்து விடுங்கள். எதுவும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் ஏஜென்ட்டின் கேட்டு தீர்த்து கொள்ளுங்கள்.
இதன் பின்னர் ஏஜென்ட்டிடம் முழு காசை கட்டிவிடலாம். இதை தொடர்ந்து உங்களுக்கு டிக்கெட் போடப்படும். சிலர் அதற்கு தனியாக காசு கேட்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து நேராக சிங்கப்பூர் வந்துவிடலாம். S Pass ஒரு வருடத்திற்கு தான் போடப்படும். பிடிக்கும் பட்சத்தில் அதை தொடர்ந்து நீட்டித்துக் கொள்ளலாம். இல்லை வேறு கம்பெனிக்கு மாறிக்கொள்ளலாம்.
S Passக்கும் Work permit வேலை செய்பவர்களுக்கும் சின்ன வித்தியாசம் தான். work permit-ல் டெஸ்ட் அடித்து வருவார்கள். S Passல் நேரடியாக வந்து விடலாம். ஆரம்ப சம்பளமே S -Passல் அதிகமாக இருக்கும். ஆனால், S Passல் வாங்கும் சம்பளத்தை விட Work Permitலும் அதிக சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதற்கு சில வருடங்கள் ஆகும் என அறியப்படுகிறது.