TamilSaaga

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை: விமான டிக்கெட் விலை சரிவு!

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான விமானக் கட்டணத்தில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. விசா வழங்குவதில் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள், நாடு கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான புதிய நிர்வாக நடைமுறைகள் ஆகியவை இதற்குக் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய நடைமுறைகளால் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்திய மாணவர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கையும், அங்கிருந்து இந்தியா திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. வழக்கமாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் இந்தியாவுக்கு வருவது வழக்கம். அதேபோல், கல்வி மற்றும் தொழில் நிமித்தமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் அதிகரிப்பது வழக்கம்.

UAE போறீங்களா? இனி 2 மணி நேரத்துல மும்பைல இருந்து போகலாம்!

ஆனால், தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகளால் இந்த ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான விமான முன்பதிவு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டெல்லி – அமெரிக்கா பயணத்திற்கான விமானக் கட்டணம் (Flight Tickets) சுமார் 15 சதவீதம் வரை குறைந்துள்ளதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இயக்கப்படும் விமானங்களுக்கான பயணக் கட்டணம் கூட 8 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று பயண ஏற்பாட்டாளர்கள் மேலும் கூறுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலேயே விமானக் கட்டணம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது என்று பயண நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தின் தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, வரும் மாதங்களிலும் இந்தியா-அமெரிக்கா இடையேயான விமானக் கட்டணம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கருதுகின்றனர். இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், விமான நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்கள் இந்த கட்டண சரிவால் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

Related posts