உலக அளவில் சுற்றமும் நட்பும் சூழ திருமணம் வெகு விமர்சையாக நடக்கும் ஒரு சில நாடுகளில் ஒன்று தான் நமது அண்டை நாடான இந்தியா. உலக அளவில் பல கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் ஒருமுறையேனும் இந்திய கலாச்சாரத்தில் கலந்துவிடமாட்டோமா? என்று எண்ணுவது உண்மை தான்.
சில தினங்களுக்கு முன்பு கூட ஆஸ்திரேலியா நாட்டின் புகழ்மிக்க கிரிக்கெட் வீரரும் RCB அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான Glen Maxwell ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற ஒரு இந்திய பெண்ணை காதலித்து திருமண செய்தார். அதிலும் குறிப்பாக அந்த பெண் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது Maxwell வரிசையில் பிரிட்டன் நாட்டின் வர்த்தக தூதரக பணிசெய்து வரும் Rhiannon Harries என்பவர் இணைந்துள்ளார். இவருக்கும் பாண்டே என்பவருக்கும் தற்போது இந்திய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
பாண்டே ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சுமார் 4 ஆண்டுகளாக துணை வர்த்தக ஆணையர் பதவியில் இருந்து வரும் Harries பல கனவுகளோடு இந்தியா வந்துள்ளார். “ஆனால் ஒருவரை காதலித்து அவரோடு எனது திருமண வாழ்க்கை இந்தியாவில் துவங்கும் என்று தான் யோசித்துப் பார்த்ததில்லை” என்கிறார் Harries.
தனது படப்பிடிப்பு விஷயமாக அடிக்கடி வெளிநாடு செல்லும் பாண்டே தனது எதிர்கால மனைவியை தூதரகத்தில் சந்தித்தார். காதலுக்கு ஜாதி மத பேதம் எப்போதுமே இல்லை, இதில் நாடென்ன நகரமென்ன..!
Harries மற்றும் பாண்டே இடையே இருந்த நட்பு என்னும் நூல், 4 ஆண்டுகளில் காதல் என்ற அழகிய ஆடையாக மாற தனது காதலரின் ஊர் வழக்கப்படி திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார் ஹாரிஸ். அப்புறம் என்ன டும் டும் டும் தான்!
வட இந்திய கலாச்சாரப்படி திருமண சடங்குகள் முறைப்படி மணப்பெண் லெஹன்கா கட்டி திருமண மேடைக்கு வந்தார். இந்திய மணப்பெண்ணுக்கே உரித்தான அலங்காரம், நகைகள் என்று ஒரு இந்திய பெண்ணாகவே தோற்றமளித்தார் ஹாரிஸ்.
நான்கு ஆண்டு காதல் தற்போது நல்லதொரு குடும்ப வாழ்க்கையாக மாறியுள்ளது. மணமக்களுக்கு பொதுமக்களும் நெட்டிசன்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். எல்லை தாண்டி காதலால் கரம் சேர்ந்த இந்த ஜோடிக்கு நாமும் வாழ்த்து தெரிவிப்போம்.