மனைவியின் சம்மதமின்றி அவருடைய கணவர் அந்த பெண்ணோடு உறவுகொள்வது குற்றமாகுமா என்பது குறித்த வழக்கில் அண்டை நாடான இந்தியாவில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்று அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் சம்மதம் இன்றி கணவர் அவருடன் கட்டாய உறவு கொள்வது குற்றமாகுமா? என்பது குறித்து சில மாதங்களுக்கு முன்பு இந்திய மாநிலங்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஏற்கனவே இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த நிகழ்வு குறித்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவை அனுமதிக்காது என்று அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கில் நீதிபதி ஒருவர் அளித்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். சுமார் 193 பக்க தீர்ப்பை வாசித்த 2 நீதிபதிகளில் ஒருவர், “மனைவியை பலாத்காரம் செய்வது, அவருடைய விருப்பம் இல்லாமல் கணவர் அவருக்கு பாலியல் சீண்டல் கொடுப்பது குற்றமாகாது என்று பல சட்ட பிரிவுகளை சுட்டிக்காட்டி தீர்ப்பளித்தார்.
ஆனால் மனைவியாகவே இருந்தாலும் ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் பலவந்தப்படுத்தி உறவு கொள்வது என்பது ஏற்புடையது அல்ல என்றும் இந்த குற்றத்தை புரிந்தவர் கனவாகவே இருந்தாலும் அவர் குற்றவாளி தான் என்று நீதிபதி ராஜீவ் சாக்தார் மாற்றுக் கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.
இந்நிலையில் 2 நீதிபதிகளைக் கொண்ட ஒரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே மாறுபட்ட கருத்துக்கள் இருந்ததால் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட வேறு ஒரு அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.