TamilSaaga

10 ஆண்டு உழைப்பு.. 20 கி.மீட்டர் தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும்.. ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் “உலகின் உயரமான சிவன் சிலை”!

உலகிலேயே மிக மிக உயரமான சிவன் சிலை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (அக்.29) சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

369 அடி உயரம் கொண்ட இந்த சிவன் சிலை ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ (நம்பிக்கை சிலை) என்று அழைக்கப்படுகிறது. ராஜஸ்தானின் Nathdwara-ல் இது நிறுவப்பட்டுள்ளது.

உதய்பூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிலையை Tat Padam Sansthan அமைப்பு கட்டியுள்ளது.

மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, சிவன் தியானம் செய்யும் தோரணையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு 20 கிலோமீட்டர் தொலைவில் எங்கிருந்து பார்த்தாலும் இந்த சிலை தெரியும் என்று கூறப்படுகிறது.

உலகின் மிக உயரமான சிவன் சிலை இதுவாகும், அதில் லிஃப்ட், படிக்கட்டுகள் மற்றும் பக்தர்களுக்கான மண்டபம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. உள்ளே செல்ல நான்கு லிஃப்ட் மற்றும் மூன்று படிக்கட்டுகள் உள்ளன.

மேலும் படிக்க – சிங்கப்பூர் “ரோத்தா”… உலகிலேயே கொடூரமான தண்டனை – சிங்கப்பூரில் “கற்பழிப்பு” என்ற கான்செப்ட்டையே ஒழித்து பெண்களை நள்ளிரவிலும் நடக்க வைத்த மெகா “ஆயுதம்”

3 ஆயிரம் டன் எஃகு மற்றும் இரும்பு, 2.5 லட்சம் கன டன் கான்கிரீட் மற்றும் மணல் இதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமான இந்த சிலையை கட்டிமுடிக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வராக இருந்த அசோக் கெலாட் மற்றும் மொராரி பாபு முன்னிலையில் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த சிலை 250 ஆண்டுகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மணிக்கு 250 கிமீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது என்றும் கூறியுள்ளனர்.

உலகின் பிற இடங்களில் உள்ள மிக உயரமான சிவன் சிலைகளின் லிஸ்ட்:

நேபாளத்தின் கைலாஷ்நாத் மகாதேவ் சிலை (144 அடி)
கர்நாடகாவின் முருதேஸ்வர் சிவன் சிலை (123 அடி)
குஜராத்தின் சர்வேஸ்வர் மகாதேவ் சிலை (120 அடி)
கோவை ஆதியோகி சிலை (112 அடி)
மொரீஷியஸின் மங்கள் மகாதேவ் சிலை (108 அடி)
அலகாபாத்தின் மங்காமேஸ்வர் சிவன் சிலை (108 அடி)
ஹர்த்வாரின் ஹர் கி பவுரி சிவன் சிலை (100 அடி)

இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில், 369 அடி உயரத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts