இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் இருந்து துபாய்க்கு தனியொரு ஆளுக்காக பிறந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். பிரபல தொழிலதிபர் எஸ்.பி. சிங் ஓபராய் என்பவர் தான் அந்த லக்கி கஸ்டமர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. சிங் ஓபராய் பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபர், 10 ஆண்டுகால வெளிநாட்டு விசா வைத்திருக்கும் இவர் அடிக்கடி வியாபார ரீதியாக உலகின் பல நாடுகளுக்கு பயணிப்பது வழக்கம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமிர்தசரஸ் நகரில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு பதிவு செய்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், அவரை தவிர வெறு யாரும் அந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் முழு விமானத்திலும் எஸ்.பி.சிங் ஓபராய் மகாராஜாவை போல தனியாக பயணித்துள்ளார்.
சக பயணிகள் யாரும் இன்றி தனியே பயணித்தது போர் அடித்ததாக எஸ்.பி. சிங் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் துபாய் அரசுக்கும் இந்திய அரசுக்கும் தனது நன்றிகளையும் உரிதாக்குவதாக ஓபராய் தெரிவித்தார்.