அண்டைநாடான இந்தியாவில் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக Air Suvidha என்ற Online படிவம் செயல்முறையில் உள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் இந்தியா சென்றவர்களுக்கு இது நன்கு பரிட்சயமான ஒன்றாக இருக்கும். “ஏர் சுவிதா” என்பது தங்களுடைய சுய அறிவிப்பு படிவத்தை இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் கட்டாயமாக நிரப்ப வேண்டும். இது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த Air Suvidha புதிதாக ஒரு Update ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் Covid – 19 RT PCR டெஸ்ட் சான்றிதழ் மற்றும் பதிவேற்றம் செய்ய சொன்ன இந்தியாவின் மத்திய அரசு தற்போது பெருந்தொற்று தடுப்பூசி போட்டு அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க சொல்லி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகையால் இனி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் RT-PCR எதிர்மறை சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் அந்த சோதனை முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களுடைய தடுப்பூசி சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும் கூடுதலான தகவல்களை பெற இந்த இணையத்தை பார்க்கலாம்.
தற்போது சிங்கப்பூர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்பட 6 நாடுகளை சேர்ந்த மக்களை வரவேற்க சிங்கப்பூர் தயாராகி வருகின்றது. சில கட்டுப்பாடுகளுடன் சிங்கப்பூருக்குள் வர அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.