TamilSaaga

‘பெண்களின் அழகு உண்மையில் குணத்திலே’ உள்ளது…புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன் அழகிய முடியை தியாகம் செய்த கேரளா பெண் போலீஸ்!

பெண்களுக்கு பொதுவாக கூந்தல் என்றாலே அலாதி பிரியம் தான். எதற்கும் செலவு செய்யாத பெண்களும் கூட முடி உதிர்வதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வதை நாம் பார்த்திருக்கின்றோம். அப்படி இருக்கும் பொழுது கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதான அபர்ணா என்ற பெண் போலீஸ் முட்டி வரை இருந்த தன் அழகிய கூந்தலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடியை இழந்திருக்கும் நோயாளிகளுக்கு தானமாக அளித்திருக்கின்றார்.

திருச்சூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் இவர் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கு பெற்ற பொழுது அங்கு ஐந்து வயது சிறுமி ஒருவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருப்பதை பார்த்திருக்கின்றார். பொதுவாக கேன்சருக்கு சிகிச்சை எடுப்பதற்காக கிமோத்தெரபி அளிக்கப்படும் பொழுது முடி உதிரும். இதனால் பலரும் மொட்டை அடிப்பார்.

நோயினால் ஒருபுறம் மனம் வேதனை அடைந்திருக்கும் பொழுது, மொட்டை அடித்ததன் காரணமாக அனைவரும் தவறாக நினைப்பார்களோ என்ற மனவேதனை ஒருபுறம் அவர்களை வாட்டி வதைக்கும். எனவே கேன்சர் நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்து அவர்களுக்கு விக் தயாரிப்பதற்காக தனது தலைமுடியை தானமாக அளிக்க இவர் முடிவு செய்துள்ளார். அகத்தின் அழகு முகத்தில் இல்லை செயலிலேயே இருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் இவர் செய்திருக்கின்ற செயல் அனைவரையும் நிகழ செய்துள்ளது.

Related posts