TamilSaaga

“ராமேஸ்வரம் டு அயோத்தி”.. பலே திட்டம் தீட்டும் மோடி… எந்த பிரதமரும் இதுவரை எடுக்காத முயற்சி!

இந்திய வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் செய்யாத முயற்சியாக ராமரின் புண்ணிய பூமி ஆன அயோத்தியில் பிரம்மாண்ட கோவிலை கட்டி முடித்துள்ளார் பிரதமர் மோடி. அயோத்தி கோவிலின் குடமுழுக்கு விழாவானது ஜனவரி 22 ஆம் தேதி குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள முக்கியமான பிரபலங்களுக்கு குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பத்திரிக்கை அளிக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

குடமுழுக்கு விழாவிற்கான சிறப்பு சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆனது ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில் விழாவினை மேலும் சிறப்பாக பிரதமர் அவர்கள் சிறப்பான திட்டம் தீட்டியுள்ளார். ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை புரியுள்ள பிரதமர் ராமரின் கால் பட்ட புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரத்தில் இருந்து புனித தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு அயோத்திக்கு செல்ல வருகிறார். தற்பொழுது அவர் இந்தியாவில் உள்ள பிரபல கோவில்களான சிறப்பு குருவாயூர் கோவில்களில் நேரில் சென்று வழிபட்டு வருகின்றார்.

ஜனவரி 20ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி அங்கே பெருமாளை தரிசித்த பின்னர் ராமேஸ்வரம் சென்று புனித நீராடி தீர்த்தத்தை எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடக்கலையிலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு பார்த்து கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் விசேஷ தினமான கும்பாபிஷேகத்தை மேலும் சிறப்பாகும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் முழு முயற்சியில் இறங்கியுள்ளார்.

Related posts