TamilSaaga

அருவருப்பின் உச்சம்! உடும்பை பாலியல் பலாத்காரம் செய்த 4 இந்தியர்கள் கைது – துப்பாக்கி முனையில் வைத்து நிகழ்த்தப்பட்ட கொடுமை!

உலகளவில் இப்படியொரு செய்தியை இதுவரை யாரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை!

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில் (STR) வங்காள மானிட்டர் பல்லியை (இந்திய உடும்பு) பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் கோத்தானேவில் உள்ள காபா பகுதியில் உள்ள சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 4 பேர், அங்கிருந்த வங்காள மானிட்டர் பல்லியை வன்கொடுமை செய்துள்ளனர்.

தகவலறிந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த வனத்துறை அதிகாரிகள் சந்தீப் துக்ராம், அக்ஷய் சுனில், ஜனார்தன் காம்டேகர் மற்றும் பவார் மங்கேஷ் ஆகிய நால்வரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் மிகப்பெரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு.. பொதுமக்களுக்காக திறப்பு – திருக்குறளை மேற்கோள்காட்டி அசர வைத்த அமைச்சர்!

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் வேட்டையாடுவதற்காக காடுகளுக்குச் சென்றது கண்டறியப்பட்டது. வேட்டையாடப்பட்ட பாங்கோலின், முயல், எலிமான் மற்றும் முள்ளம்பன்றியின் பல புகைப்படங்களும் மொபைல் போனில் காணப்பட்டன.

எனினும், ஏப்., 8ம் தேதி உள்ளூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் வங்காள மானிட்டர் பல்லி பாதுகாக்கப்பட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

குற்றம் நிரூபிக்கப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts