TamilSaaga

பிரான்ஸ் நாட்டின் Saint Tropez பகுதி – கடுமையாக பரவும் காட்டுத்தீ : போராடும் தீயானைப்பு வீரர்கள்

தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து பரவியதாகக் கருதப்படும் “பீட்டா” வகை வைரஸ் பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பிரான்ஸ் அரசு நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. மேலும் “சுகாதார பாஸ்” என்ற ஒன்றை அறிமுகம் செய்து மக்களின் சுகாதார நிலையை கடுமையாக கண்காணித்து வருகிறது பிரான்ஸ் நாட்டு அரசு.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிற்கு கூடுதல் தலைவலியாக தெற்கு பிரான்ஸ் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவி வரும் நிலையில் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள செயின்ட் Tropez என்ற நகரத்தில் தான் தற்போது இந்த காட்டுத் தீயானது மிக பயங்கரமான அளவில் பரவிக்கொண்டு வருகிறது.

700-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதீதமான வெப்பமும் அதைவிட பலத்த காற்றும் வீசி வருவதால் பரவிவரும் காட்டுத் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்

Related posts