TamilSaaga

Suresnes பகுதியில் துப்பாக்கிசூடு ; பயிற்சியில் இருந்த காவலருக்கு காயம்.

நேற்று முன்தினம் Suresnes பகுதியில் நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேன்ஸ் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகின்றது. சுரேன்ஸ் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது காவலர்கள் சிலர் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும்.

அந்த பயிற்சியின்போதும் எதிர்பாராதவிதமாக குண்டுபாய்ந்து ஒரு காவலர் மீது பட்டதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. காயமடைந்த அந்த காவலர் உடனடியாக பாரிஸ் பதினைந்தாம் வட்டாரத்தில் இருக்கின்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக தற்போது தேசிய காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts