TamilSaaga

பிரான்ஸ் நாட்டின் Tahiti போன்ற மாகாணங்கள் – மீண்டும் அதிகரிக்கும் பெருந்தொற்று பரவல்

பிரான்ஸ் நாடு சில தினங்களுக்கு முன்பு சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்த சில நாடுகளுக்கு தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து இந்தியர்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பிரான்ஸ் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் மீண்டும் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய பீட்டா வகை வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தீவு மாகாணங்களான பொலினேசித்தில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

மேலும் தாஹிதி உள்பட சில தீவுகளிலும் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த இடங்களில் தொற்று எண்ணிக்கையானது 1 லட்சம் பேருக்கு 6 பேர் என்ற விகிதத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது சுமார் 45 மடங்கு அதிகரித்து, 1 லட்சம் பேருக்கு 267 பேர் என்று உயர்ந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் டெல்டா பிளஸ் பட்டியலில் இருந்து விரைவில் பிரான்ஸ் நாடு நீக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Related posts