பிரான்சு தென்கிழக்கு பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சு நாட்டின் தென்கிழக்கு பகுதிகளின் 5 இடங்களான Ardèche, Alpes-Maritimes, Var, Drôme மற்றும் Alpes-de-Haute-Provence ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 36-39°C வரைஉயரும் என்றும், இன்று (ஆகஸ்ட்.15) முதல் வெப்பநிலை குறையலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் முதியோர், குழந்தைகள், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் கவனமாக இருக்கு வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் வெயிலில் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை தவிர பிற பகுதிகளான Pyrénées-Orientales, Aude, Hérault, Gard, Bouches-du-Rhône, Vaucluse, Lozère, Haute-Loire, Rhône, Isère, Hautes-Alpes மற்றும் Corsica ஆகிய பகுதிகளுக்கு வெப்பநிலை தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.