TamilSaaga

“இது வெறும் ட்ரையல்” : துமாசிக் அறநிறுவனம் இன்று முகமூடி விநியோகம் செய்யவில்லை – ஹோ சிங்

சிங்கப்பூரில் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 4) முகமூடி விநியோகம் இல்லை என்று டெமாசெக் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. முகக்கவசம் விநியோகம் செய்யப்படுவதாக கூறி விளம்பரப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கிய அதைத்தொடர்ந்து அந்த நிறுவனம் இந்த நிகழ்வு குறித்து தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளது.

இது ஒருபுறம் இருப்பினும் அவசர மருத்துவ தேவைகளுக்கு உதவும் கவசங்களையும், N95 ரகத்தைச் சேர்ந்த கவசங்களையும் மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான முன்னோட்ட சோதனைகளை அந்த நிறுவனம் தற்போது நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த நடவடிக்கையும் இந்த மாத இறுதி அல்லது எதிர்வரும் மாதத்தின் தொடக்கத்தில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு பயணிகள் கட்டண சீட்டினை அளித்து முகக்கவசங்களை பெற்றுக்கொள்வதற்கான முன்னோட்ட சோதனை நடவடிக்கைகளை CapitaLand நிறுவனத்துடன் இணைந்து அந்த நிறுவானம் செயல்படுத்தி வருகின்றது.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேபிடலாண்ட் மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடி கடைகளில் முகமூடிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த பேனரில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts