TamilSaaga

சென்ற ஆண்டு பிரான்சில் 100க்கும் அதிகமான பெண்கள் மரணம் – காரணம் என்ன? விளக்கமளித்த அமைச்சர்

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் அவரவர் குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளால் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் கடந்த ஆண்டில் குடும்ப வன்முறையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 102 பெண்கள் உயிரிழந்திருப்பதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த கிருமி பரவல் காலகட்டத்தில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களின் குடும்பங்களுக்கு இடையே தகராறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கணவன் மற்றும் மனைவி இடையே சண்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குடும்ப தகராறுகளில் கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் உயிரிழந்திருக்கும் இந்த சமயத்தில் கணவனால் பெண்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக அரசின் பார்வைக்கு கொண்டு வருவதற்கு பிரான்ஸ் அரசு பல பாதுகாப்பு எண்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புகாரளிக்கும் பட்சத்தில் கட்டாயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.

Related posts