TamilSaaga

“அன்னிக்கு அவர் வச்ச ஷாட்… இன்னிக்கு வரை எனக்கு சோறு போடுது” – என் வாழ்க்கையின் “Turning Point” – நடிகர் கருப்பு நம்பியாருடன் Exclusive நேர்காணல்!

பல தமிழ் திரைப்படங்களில் அருமையான பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் கோபால கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கருப்பு நம்பியார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பலர் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் கருப்பு நம்பியார். அவர் தனது கலைத்துறை பயணத்தை நமது தமிழ் சாகா சிங்கப்பூர் நேயர்களுக்காக ஒரு சிறப்பு நேர்காணல் வழியாக பகிர்ந்துள்ளார். அந்த சுவாரசியமான நேர்காணல் பினருமாறு..

கேள்வி : கருப்பு நம்பியார் பற்றி மக்களுக்கு நிரம்பத் தெரியும், ஆனால் கோபால கிருஷ்ணன் யார்? எங்கிருந்து அவர் சினிமா பயணம் துவங்கியது?

பதில் : அம்மா அப்பா எனக்கு வச்ச பெயர் கோபால கிருஷ்ணன், எனக்கு சொந்த ஊர் பெரம்பலூர் பக்கம் செட்டிக்குளம். அப்பா பெயர் ரங்கராஜ், அம்மா பெயர் தனலட்சுமி, அப்பா ஒரு School வாத்தியார். என் கூட பிறந்தவர்கள் 5 பேர் அதில் நான் நடுப்பிள்ளை. எனக்கு சினிமா ஆசை முளைக்க முதல் காரணமே என் அப்பா தான். அவர் ஒரு School வாத்தியாராக இருந்தாலும் அப்பா கூட Second Show சினிமா போகிற ஒரே மகன் அந்த ஊர்ல யாருன்னு பாத்தா அது நான் தான் என்றார் கலகலத்த சிரிப்புடன்.

அப்பா டீச்சர், அதனால School போயிட்டு வந்து, LIC ஏஜெண்டாக இருந்ததால் அந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு, சாப்பிட்ட பிறகு தான் சினிமா பாக்க போவோம். ஆனா மத்த 4 பிள்ளைகளை விட்டுட்டு என்ன மட்டும் ஏன் சினிமா கூட்டிட்டு போனாருனு அவருக்கும் தெரியல எனக்கும் தெரியல. சினிமா மேல ஒரு ஈர்ப்பு வருவதற்கு அதுதான் முதல் காரணம். அப்புறம் நான் எட்டாவது படிக்கிறப்ப உதயகீதம் படத்துல வர “தேனே தென்பாண்டி மீனே” பாட்டை பாடி பரிசும் வாங்கினேன். அந்த பரிசு பெற்றதும் சினிமா மீதான அந்த போதை இன்னும் அதிகமாகிடுச்சு.

நாட்கள் கடந்துச்சு அந்த சமயத்துல தான் நாயகன், மனிதன் படம் எல்லாம் வெளியானது, அந்த படத்தோட பாடல்கள் எல்லாம் அப்போ ஒலியும் ஒளியும் நிகழ்ச்சில பார்ப்போம். அப்போ நாயகன் படத்துல மட்டும் கமல் சார் எனக்கு என்னமோ ரொம்ப வித்யாசமா தெரிஞ்சாரு. அதுக்கு முன் வரை நான் எல்லாரோடைய படங்களையும் பார்ப்பேன், ஆனா நாயகனுக்கு பிறகு எனக்கு கமல் சார் மேல ஈர்ப்பு அதிகமாச்சு. அப்புறம் அதுக்கு முன்ன ரிலீஸ் ஆனா அவரோட சில திரைப்படங்கள் திருச்சியில Second ரிலீஸ் ஆச்சு, அதெல்லாம் தேடித்தேடி பார்க்க ஆரமிச்சேன். சத்யராஜ் சார் நக்கல் எல்லாம் எனக்கு புடிக்கும் ஆனா எல்லாத்துக்கும் மேல கமல் சார் ஒரு Step அதிகமா புடிக்கும்.

கடைசியா 1991ல குணா, தளபதி ரெண்டு படமும் ஒன்றாக ரிலீஸ் ஆச்சு, அப்போ குணா பாத்துட்டு எனக்கும் ரொம்ப முத்திப்போச்சு. சரி இனிமேல் தாங்காது நம்ம சினிமாவுக்கு தான் போகணும் அப்டினு சொல்லி அப்போ முடிவு பண்ணினேன். அதுவும் அப்போ சரியா நான் பிளஸ் 2 முடித்த நேரம், அய்யயோ எங்க வீட்ல காலேஜ் அனுப்பிடுவாங்களோனு ஒரு பயத்துல இருந்தேன். வீட்லயும் நான் நினச்சமாதிரியே ஒரு டிகிரி முடிச்சுட்டு எங்கவேணாலும் போ அப்டினு சொல்லிட்டாங்க. ஆனா குணா பார்த்த அந்த வேகத்துல நான் சென்னை கிளம்பி வந்துட்டேன்.

கேள்வி : சென்னை Harbor வேலையே வேண்டாம் என்று சொல்ல தைரியம் எப்படி வந்தது? கோபால கிருஷ்ணன் மேல் இருந்த அதிர்ப்தியா? இல்லை கருப்பு நம்பியார் மீது கொண்ட நம்பிக்கையா?

நிச்சயம் கருப்பு நம்பியார் மீது இருந்த ஒரு நம்பிக்கை தான் அது, எங்க வீட்டை பொறுத்தவரை எல்லாருமே Government Job தான். ஆனா எனக்கு என்னமோ அந்த 9 to 5 வேலை மேல ஈடுபாடு இல்ல, எனக்கு முழு நாட்டமும் சினிமா மேல மட்டும் தான். நல்ல வேல அதுக்கு அப்புறம் Government Job பக்கம் போகல.

குணா படத்துல அபிராமி, அபிராமினு கமல் சார் சொல்லுவாருல, எனக்கும் அப்படி ஒன்னு நடந்துச்சு. நான் குணா படம் பார்த்துட்டு சென்னை வந்தேன். அப்போ பஸ்டாண்ட் கோயம்பேடு கிடையாது பாரிஸ் கார்னர் தான். பாரிஸ் கார்னர்ல இறங்கி மெரீனா பீச் போய் எம்ஜிஆர் அய்யா சமாதிக்கு சூடம் கொளுத்திட்டு, “தலைவா எப்படியாவது என்ன நடிகனா ஆக்கிடு தலைவானு” காலையில 5.30 மணிக்கே யாரும் பாக்கறதுக்கு முன்ன விழுந்து கும்பிட்டுட்டு Egmoreல நண்பர் ஒருத்தர் ஹோட்டல வேலைபார்த்துட்டு இருந்தார் அவரை பார்க்க போனேன். அவர் இருந்த ஹோட்டல் பேரு அபிராமி. சரி குணா படத்துலயும் அபிராமி நம்ம வந்திருக்க இடமும் அபிராமி. நம்ம ஜெயிச்சிட்டோம், அப்டினு ஒரு சந்தோசம் மனசுக்குள்ள..

கேள்வி : 1998ம் ஆண்டு ஆரம்பித்தது உங்கள் சினிமா பயணம், இப்போ 25 வருஷம் ஆகப்போகுது. இந்த நேரத்துல உங்க மனநிலை எப்படி இருக்கு?. நீங்க ஆசைப்பட்டு சென்னை வந்த அந்த ஒரு விஷயத்தை சாதிச்சிட்டிங்களா?

பதில் : நம்ம நினைச்ச தொழிலை choose பண்றது மட்டும் தான் நம்ம வேலை, அதுக்கு மட்டும் தான் உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் வேணும். அதுக்கு அப்புறம் அந்த பயணமெல்லாம் நிக்காது. உயிர் இருக்குற வரை இன்னும் எதாவது புதுசா செய்யணும்னு மட்டும் தான் தோணும். நீங்க, சினிமா தான் என் வாழ்க்கைனு Choose பண்ணத்தான் உங்களுக்கு தைரியம் வேணும். அதுக்கு அப்புறம் எல்லை என்பது கிடையாது, எனக்கு இது போதும்னு நீங்க Satisfy ஆகிட்டீங்கன்னா அவ்ளோதான் அதுக்கு மேல நீங்க பயணிக்க முடியாது.

கேள்வி : தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுக்க வந்தவர் தான் கருப்பு நம்பியார், ஆனால் இப்போ மிகசிறந்த நடிகராக வலம்வருகிறார். முதல் படமே பாலுமகேந்திரா அவர்களால் இயக்கப்பட்ட ஒரு நடிகர் நீங்கள். அந்த முதல் பட அனுபவம் எப்படி இருந்தது?

பதில் : அந்த படத்திற்கான வாய்ப்பு எனக்கு 2004ம் ஆண்டு கிடைத்தது, அப்போதான் நான் சென்னை KK நகர் பக்கம் என் நண்பரோடு தங்கியிருந்தேன். என்னோடு ஊர்க்காரங்க சிலர் அப்போ சினிமால இருந்தாங்க. இயக்குநர் செல்வபாரதிகிட்ட பணிபுரிந்த புகழ் மற்றும் இயக்குநர் கீரா எல்லாம் அப்போ சின்னத்திரையில இருந்தாங்க. அவங்களிடம் தான் சினிமா வாய்ப்பு கேட்டேன், நான் அவங்ககிட்ட சினிமா வாய்ப்பு கேட்கும்போதே எனக்கு வயசு 30. சின்ன வயசுல இருந்து ஆசை இருந்தாலும் 30 வயசுல தான் எனக்கு அந்த தைரியம் வந்திச்சு. அப்போ தான் புகழ் ஒரு அட்வைஸ் பண்ணாரு, யோவ் உனக்கு இப்போவே வயசு 30 ஆகிடுச்சு, பேசாம நீ Direction பக்கம் இல்லாம நடிக்க வாய்ப்பு தேடுன்னு அவர்தான் சொன்னாரு.

அப்புறம் புகழ் சொன்னாரு, நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரு, அவர் ஸ்டில் போட்டோக்ராபர், அவர் தான் சிம்ரனை VIP படத்துக்காக ஸ்டில் எடுத்தவர். அவர்கிட்ட சொல்றேன், நீ போட்டோ எடுத்துக்கிட்டு எல்லா Production ஆபீஸ்லையும் குடு கண்டிப்பா நீ நடிகனா ஆகிடலாம்னு அவர் தான் முதல்ல தைரியம் சொன்னாரு. அதுக்கு அப்புறம் சங்ககிரி கார்த்தி என்ற எனது நண்பர் ஒருவர் தான் 2004 டிசம்பர் மாசத்தில அந்த ஸ்டில் போட்டோ எடுக்க உதவி செஞ்சாரு. 250 ரூபா குடுத்து, “தலைவா போட்டோ எடுத்து எல்லா ஆபீஸ்லையும் குடுங்கனு” சொன்னாரு. அப்புறம் புகழ் சார் ரூம்ல தான் ஸ்டில் எடுத்தேன், ஸ்டில்ஸ் பூபதி சார் தான் ஸ்டில்ஸ் எடுத்தாரு.

அந்த போட்டோக்களை எடுத்துக்கிட்டு நான் போன ரெண்டே ஆபீஸ் ஒன்னு தங்கர்பச்சன் சார் ஆபீஸ் இன்னொன்னு பாலுமகேந்திரா சார் ஆபீஸ். ஏன்னா அந்த நேரத்தில அழகி படம் ரொம்பவும் பேமஸ். அதனால ஈக்காட்டுத்தாங்கல அவர் ஆபீஸ், அப்புறம் சாலிகிராமம் பாலுமஹேந்திரன் சார் ஆபீஸ் அப்டினு ரெண்டு இடத்துலயும் போட்டோ குடுத்தேன். அப்போ தான் அங்க “அது ஒரு கனா காலம்” அப்படிங்கிற படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அப்போ வெற்றிமாறன், காக்கி சட்டை இயக்குநர் செந்தில் எல்லாம் அங்க இருந்தாங்க, ஆனா அப்போ அவங்க யார்னு எனக்கு தெரியாது. ஆக இந்த ரெண்டு இடத்துல தான் ஸ்டில்ஸ் குடுத்தேன். குடுத்த ஒரே வாரத்துல எனக்கு பாலுமஹேந்திரன் ஆபீஸ்ல இருந்து போன் வந்திச்சு.

ஜெயில் சீன் ஒன்னு இருக்கு, அதுல நீங்க வார்டன் ரோல் பன்றிங்கனு சொன்னதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. என்னடா இது ஸ்டில் இப்போதான் கொடுத்தோம் அதுக்குள்ள கூப்பிட்டாங்கனு ஒரே சந்தோசம். ஆனா உடனேயே அவங்க கூப்பிட்டாலும் ஷூட்டிங் போக 7 மாசம் ஆகிடுச்சு. நடுல பைனான்ஸ் பிரச்சனைல படம் கொஞ்சம் delay ஆயிடுச்சு, அதுக்கு அப்புறம் கும்பகோணம் தீ விபத்துல நிறைய குழந்தைகள் இறந்துட்டாங்க. அப்போ அத நினச்சு பாலுமகேந்திரா சாருக்கு உடம்பு சரியில்லாம போகிடுச்சு. அப்புறம் சரியா டிசம்பர் மாசம் சுனாமி வந்தப்பத்தான் ஷூட்டிங் ஆரமிச்சாங்க.

அதுக்கு இடைப்பட்ட காலத்துல எனக்கு என் அக்கா உதவி பண்ணாங்க, ஏன்னா சினிமாகாரன்னுக்கு மிகப்பெரிய பலமே Survival தான், அதனால அடுத்தவங்க உதவி இல்லாமல் நீங்கள் சினிமால ஜெயிக்க முடியாது. அது ஒரு தவம், மற்ற எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு ஒரு தவம் மாதிரி இருந்தாதான் சினிமால ஜெயிக்க முடியும். இல்ல, என்னால சினிமா ஒருபக்கம் வேற வேலை ஒருபக்கம் என்று சமாளிக்க முடியும் என்று சொன்னால் நிச்சயம் உங்களால ஜெயிக்க முடியாது. நடிக்கலாம், அப்பப்போ ஒரு படம் ரெண்டு படம் பண்ணலாம் ஆனா சாதிக்க முடியாது. தவம் மாதிரி இருந்தாதான் நீங்க History ஆக முடியும்.

கேள்வி : பாலுமகேந்திரன் சார் படம், சேரன் சார் படத்துக்கு பிறகு உங்களுக்கு கிடைத்த படம் பருத்தி வீரன். ஆனால் உங்களை ரொம்பவும் வருத்தப்பட வைத்த படமும் அதுதான். ஏன் சார்? என்ன ஆச்சு?

Compulsoryங்க, பருத்தி வீரன் எனக்கு ஒரு மிகப்பெரிய பாடம், ஏன்னா கிட்டத்தட்ட 30 நாள் ஷூட்டிங் போனேன் பருத்தி வீரன் படத்துக்கு. ஆனா அதுல நான் பண்ணதெல்லாம் maximum வரல (சிரிப்போடு). நல்லா பாத்தீங்கன்னா தெரியும் போஸ்டர்ல நான் இருப்பேன். கார்த்திக் சாருக்கு அது முதல் படம், ஆனா எனக்கு வருத்தம் இருந்திச்சு என்னடா 1 மாசம் தினமும் ஷூட்டிங் போனோம் வந்தோம் ஆனா நம்ம முகமே தெரியலையே, சரியான ஒரு வசனம் வரலயேன்னு ஒரு ஏக்கம் இருந்துச்சு. இப்பவும் அந்த வருத்தம் இருக்கு.

உண்மையிலேயே இதுக்கு அப்புறம் தான் எனக்கு சினிமா மீதான புரிதல் அதிகமாச்சு, சரி நமக்கு நடக்கிறது தான் 80 சதவிகிதம் எல்லாருக்கும் நடக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன். முதல்ல நம்ம மட்டும் தான் சங்கடப்படுறோம்னு நினச்சேன், ஆனா இதெல்லாம் சந்திச்சா தான் சாதனை படைக்க முடியும்னு கத்துக்கிட்டேன்.

கேள்வி : நீங்க feature films நடிச்சுட்டு இருந்தப்பத்தான் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்கள் Short Films எடுத்துட்டு இருந்தாங்க, அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தும் நீங்க அப்போ Short Films பக்கம் போகல.. அத நினச்சு வருத்தப்பட்டது உண்டா?

அப்போ சுகா இயக்கத்துல “படித்துறை” என்ற படத்துல ஒரு சலவை தொழிலாளி ரோல் பன்னிட்டு இருந்தேன். அந்த படத்துல எனக்கு ரொம்பவும் முக்கியமான ரோல். அந்த படத்தோட ரிலீஸ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன், கண்டிப்பா அந்த படத்துக்கு பிறகு ஒரு நல்ல லைப் கிடைக்கும்னு வெயிட் பண்ணினேன். அந்த இடைப்பட்ட காலகட்டத்துல தான் கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன் எல்லாம் short films எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

அப்போ அவங்க அழைப்பு விடுத்தப்ப, நான் இந்த படத்துக்காக வெயிட் பண்றேன், அபிப்ராயம் இல்லாம இல்ல சரி இந்த படம் ரிலீஸ் ஆனா இன்னும் நல்லாருக்கும்னு நினச்சேன், ஆனா இப்போ வருத்தமா இருக்கு. ஏன்னா இப்போவர அந்த “படித்துறை” படம் ரிலீஸ் ஆகல. அந்த படத்துக்கு நம்ம நடிகர் ஆர்யா தான் தயாரிப்பாளர், சென்சார்லாம் கூட முடிஞ்சுது ஆனா ஏன் வெளிவரல அப்டினா, அது அவங்களுக்கு தான் வெளிச்சம். அந்த படத்துல கிட்டத்தட்ட கதையின் நாயகன் நான் தான், படத்தின் கிளைமாக்ஸ் என்மேல் தான் முடியும். படம் ரிலீஸ் ஆய்டும்னு எதிர்பார்த்தே என்னோட சினிமா வாழ்க்கை 3 வருடம் பின்னோக்கி போய்டுச்சு. இந்த படம் அப்போவே வராதுன்னு தெரிஞ்சுருந்தா நிச்சயம் நான் வேறு வழிகளை கையாண்டிருப்பேன்.

3 வருஷ்மா அந்த படத்துக்காக வெயிட் செஞ்சு தாடி வச்சு எனக்கு சைனஸ் பிரச்சனையே வந்துட்டு. அதுவும் தாடியை வச்சுக்கிட்டு ஒரு நல்லது கெட்டதுக்கு கூட போக முடியாம இருந்தேன்.

கேள்வி : இன்றளவும் உங்களுக்கு மிகப்பெரிய பெயர் பெற்று தந்த திரைப்படம் சேதுபதி தான், So அந்த படம் குறித்தும் கொஞ்சம் சொல்லுங்கள்.

படித்துறை படத்தோட மூன்று வருட காத்திருப்புக்கு பிறகு எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு தான் சேதுபதி. நான் மீண்டும் Zeroல இருந்து ஸ்டார்ட் பண்ண படம். இனிமே தாடியே வைக்க கூடாது, ஏன்னா Continutyல மாட்டிக்கிறோம் அப்டினு சொல்லி தான் நான் அன்றிலிருந்து Clean Shaveல இருக்கேன். சேதுபதி படத்துக்கு பிறகு எவ்வளவோ பண்ணிட்டேன் ஆனா இன்னைக்கும் வெளில போகுறப்ப சேதுபதி போலீஸ் போறாரு பாருன்னு தான் சொல்றாங்க. எனக்கு அதுல ஒரு எல்லையில்லாத மகிழ்ச்சி.

கே.வி. ஆனந்த் சார் மாற்றான் படத்துல ஒரு ரோல் குடுத்தாங்க, அதுக்கு அப்புறம் அவரோட அனேகன் படத்துலேயும் நல்ல ஒரு ரோல் குடுத்தாங்க. அந்த ரோல் பாத்துட்டு தான் இவரோட வாய்ஸ் ஒருமாறி வித்யாசமா இருக்குனு சொல்லிட்டு தான் சேதுபதி படத்துல அருண் சார் கூப்பிட்டாங்க. மோசஸ் அப்டினு ஒரு போலீஸ் ரோல் இருக்குனு சொன்னாங்க. இப்போவும் ரொம்ப உறுதியா சொல்றேன் எனக்கு சேதுபதி தான் ஒரு Turning Point. அன்னைக்கு அவர் எனக்கு வச்ச “ஷாட்” தான் என்ன இப்ப வரைக்கும் சோறு சாப்பிட வச்சுருக்கு அப்டினே சொல்லலாம்.

கேள்வி : தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை ரஜினிகாந்த் அவர்கள் தான், அவர்களோடு நடித்த அந்த அனுபவம் எப்படி இருந்தது?

காலா, என்னால் மறக்க முடியாத படம், பம்பாய்ல தான் ஷூட்டிங், அதும் அங்க முதல் ஷாட் எனக்கும் ரஜினி சாருக்கும் தான். ஆபீஸ்ல நான் ஒரு பைல் எடுத்துகிட்டுபோய் ரஜினி சார்கிட்ட கொடுக்குற மாதிரி ஷாட், சார் அந்த பக்கம் நிப்பாங்க, நீங்க சார்கிட்ட பைல் குடுக்கிறிங்கனு “ஷாட்” சொல்லும்போதே முடிஞ்சுருச்சு, ஒரே சந்தோசம். அதும் ரஜினி சார், நீங்க தான் ஷாட்ல பைல் குடுக்க போறிங்களானு கேட்டாரு அதெல்லாம் மறக்கவே முடியாது. அவரோட மாப்பிள்ளை படம் பாக்கபோனப்ப போலீஸ் கிட்ட அடிவாங்குனது எல்லாம் அப்போதான் ஞாபகத்துக்கு வந்தது, ஒருமாறி பரவசத்தின் உச்சிக்கே போய்ட்டேன்.

காலைல ஷூடிங் நடக்குது, அத போட்டோ எடுத்து ஈவினிங் பேப்பர்ல “காலா ஷூட்டிங்” நடக்குதுனு நான் பைல் குடுக்கிற அந்த கட்சியின் போட்டோவையே போட்டிருந்தாங்க, அதுவும் என் பேரோட போட்டிருந்தாங்க. அத பாத்துட்டு ஊர்ல இருந்து friendsலாம் “டேய் என்னடா இதுனு கேக்க” அது ஒரு மகிழ்ச்சின் உச்சம், பரவசத்தின் உச்சம் அப்டினு ஆகிடுச்சு. ஏன்னா நான் பொறந்தப்ப அவர் படம் நடிச்சுட்டு இருக்காரு. தளபதி வரைக்கு அவர் படம் எல்லாம் ஒரு அடிதடியிலேயே தான்போய் பார்த்துட்டு வருவேன். அதனால காலா படம் எனக்கு ரொம்பவும் மனதுக்கு நெருக்கமானது.

கேள்வி : அடுத்தபடியா உங்கள் கனவு நாயகன் கமல் சார் கூட எப்போ இணையப்போரிங்க?

கடவுள்கிட்ட வேண்டிகிட்டே இருக்கேன், கமல் சார் அசிஸ்டன்ட் தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்துல “இறை” அப்டினு ஒரு வெப் சீரிஸ்ல நடிச்சுட்டேன் இறைவன் புண்ணியத்துல. So கமல் சார் கூட நடிக்கிறதுமட்டுமில்ல அவர் கூட போட்டிபோட்டுக்கிட்டு செமையா நடிக்கனும் அதுதான் என் கனவே. மிரட்டணும், கமல் சார் பாத்துட்டு யோவ் சூப்பரா நடிக்கிறனு சொல்லனும். என்ன பொறுத்தவரை கமல் சார் தமிழ் சினிமாவின் அடையாளம் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக சினிமாவின் அடையாளம் அவர்.

கேள்வி : அடுத்தபடியா என்னென்ன படங்கள் நடிச்சுட்டு இருக்கீங்க?

Zee 5 platformல இன்னும் பெயரிடப்படாத இரண்டு இணைய தொடர்கள் நடிச்சுருக்கேன், இறை வெப் தொடர் தான் எனக்கு நிச்சயம் மாஸ் ரீச், கமல் சாரும் அத பாத்துட்டாரு. நிச்சயம் என்ன கூப்பிடுவாருனு நினைக்கிறன். அதுக்கு அப்புறம் GVM சார் இயக்கத்துல Queen வெப் தொடர்ல நடிச்சுருக்கேன் அதுவும் நான் ரொம்ப விரும்பிய கதாபாத்திரம் அப்டினே சொல்லலாம் என்று கூறி தனது பதிலை முடித்தார் நடிகர் கருப்பு நம்பியார்.

Related posts