SINGAPORE: சிங்கப்பூரில் தனது பெர்மிட் உட்பட அனைத்து முக்கிய ஆவணங்களையும் தொலைத்துள்ளார் தமிழக ஊழியர் ஒருவர்.
சிங்கப்பூரில் GEOHUB ENGINEERING & CONSTRUCTION எனும் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஆனந்தன் சந்தோஷ் குமார். இவர் கடந்த ஜுலை.31ம் தேதி penjuru dormitory பேருந்து நிறுத்தம் அருகே தனது பர்ஸை தொலைத்துள்ளார்.
அதில், அவரது work permit, atm card, india driving licence, soc card, பணம் என்று அனைத்தும் வைத்திருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அவை காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்தை தொடர்பு கொண்ட சந்தோஷ், அனைத்து விவரங்களையும் கொடுத்து, கண்டுபிடித்துத் தர வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, காணாமல் போன பர்ஸ் குறித்து முறைப்படி அவர் புகாரும் கொடுத்துள்ளார்.
penjuru dormitory பேருந்து நிறுத்தம் அருகே சந்தோஷ் பர்ஸை யாராவது கண்டறிந்தாலோ அல்லது ஏற்கனவே அதனை எடுத்திருந்தாலோ, உடனடியாக +91 8269 418 418 என்ற என்னை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இதே எண்ணுக்கு நீங்கள் Whatsapp மூலம் தொடர்பு கொள்ளலாம்.