TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளே.. நீங்கள் TV வாங்கிச்செல்வது லாபமா? நஷ்டமா?

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்ப்பது என்பது இன்றளவும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரு வரமாகவே திகழ்ந்து வருகின்றது. அருமையான வேலை சூழல், கை நிறைய சம்பளம், மேம்பட்ட வாழ்க்கை முறை போன்ற பல சிறப்பான அம்சங்கள், பல நாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை செய்ய ஊக்கப்படுத்துகிறது.

அதேபோல உலகின் பிற நாடுகளில் இல்லாத பல வளமான விஷயங்களை சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இன்றளவும் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு தாயகத்துக்கு திரும்பும் பலரிடமும் அவருடைய உறவினர்கள் கேட்கும் ஒரு கேள்வி ‘எனக்கு என்னப்பா வாங்கிட்டு வந்த” என்பதுதான். வெளிநாடுகளை பொருத்தவரைக்கும் பிஸ்கட் முதல் பல மின்சாதன பொருட்கள் மற்றும் தங்கம் வரை, தரமான பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பதிவில் வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய தாயகத்திற்கு தொழிலாளர்கள் டிவி வாங்கி செல்வதை ஏன் விரும்புகின்றனர் என்றும். அதனால் அவர்களுக்கு லாபமா? அல்லது நஷ்டமா? என்பதை பற்றியும் காணலாம்.

சிங்கப்பூரை பொறுத்தவரை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை EXPO எனப்படும் சந்தைகள் நடப்பது வழக்கம். அதுபோன்று நடக்கும் EXPOகளில் பல மின்சாதன பொருட்கள் மிகக்குறைந்த விலையில் தரமாக வாங்கலாம் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவ்வாறு சிங்கப்பூரில் நடக்கும் EXPOகளிலும் பிற கடைகளிலும் வெளிநாட்டில் இருந்து வரும் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான பல மின்சாதன பொருட்களை வாங்குகின்றனர்.

இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் மத்தியில் ஆளும் அரசு வெளிநாட்டில் இருந்து வாங்கி வரும் பொருட்களுக்கு 36 சதவிகித வரி விதிப்பதற்கு முன்னாள் டிவி போன்ற மின்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா கொண்டுசெல்வது லாபமாக இருந்ததாக இருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது உள்ள சூழலில் அவர்கள் டிவி போன்ற பொருட்களை கொண்டுவரும்போது ஏர்போர்ட்டில் என்ன சூழல் நிலவுகிறது அதைவைத்து தான் அது லாபமா அல்லது நஷ்டமா என்று கணக்கிட முடியும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம்.. திருச்சி ஏர்போர்ட்டில் மறுக்கப்பட்ட அனுமதி.. கடைசி நொடியில் திசைமாறிய பயணம் – 150 பயணிகளின் திக் திக் அனுபவம்

வெளிநாடுகளில் நாம் டிவி போன்ற பொருட்களை வாங்குவது 100 சதவிகிதம் லாபம் தரும் ஒன்றாகத்தான் இருக்கும். உதாரணமாக இந்தியாவில் 35000 ரூபாய்க்கு வாங்கும் ஒரு டிவி-யினை நமது சிங்கப்பூரில் 300 வெள்ளிக்கு வாங்க முடியும். காரணம் என்னவென்றால் சிங்கப்பூரை பொறுத்தவரை டிவி உற்பத்தியாளர்கள் அதிகம். அதனால் இங்கு மிகக்குறைந்த விலையில் டிவிகளை வாங்கி தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் டிவி வாங்கி, அதை எடுத்துசெல்லும்பட்சத்தில் அவர்களுடைய தாயகத்தில் இறங்கும்போது விமான நிலையத்தில் விதிக்கப்படும் வரியை பொறுத்தே அது லாபமா? அல்லது நஷ்டமா? என்பது அடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 10000 ரூபாய்க்கு வாங்கிய பொருளுக்கு 3500 வரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் டிவி வாங்கி செல்லும் பயணிகள் அந்த டிவி வாங்கிய ரசீதை முறையாக சமர்பிக்கும்பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கு அது லாபமாகவே இருக்கும்.

அதே சமயம் ரசீது இல்லாதபட்சத்தில் நிச்சயம் அது நஷ்டமாகவே அமையும் என்பது நிதர்சனமான உண்மை. அதேபோல 32 இன்ச்களுக்கு மேல் உள்ள டிவிகளுக்கு மட்டுமே வரி என்பதும், 50 இன்ச் டிவி வரை மற்றும் விமானத்தில் கொண்டுவர அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts