TamilSaaga

படிப்பிற்கு ஏற்ற வேலையை சிங்கப்பூரில் எப்படி தேடுவது என்று சந்தேகமா? இதை மட்டும் செய்யுங்க…10000$ சம்பளத்தில் சிங்கப்பூரில் சொகுசா வாழலாம்!

படித்தவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம்தான். வொர்க் பர்மிட் மற்றும் s-பாசில் வேலைக்கு சேர விரும்புகின்றவர்கள் ஏஜென்டின் துணையுடன் எப்படியாவது ஏஜென்ட் பீஸ் கட்டி சிங்கப்பூருக்கு உள்ளே சென்றுவிடலாம்.ஆனால் படித்தவர்களுக்கு என்று கம்பெனி ஒதுக்கப்படும் ப்ரொபஷனல் ஜாப்ஸ் என்பது பெரும்பாலும் ஏஜெண்டுகள் மூலம் வரக்கூடிய வழியில் அமையாது. அவர்கள் ஜாப் மூலம் போர்டல் முறையாக ரெஸ்யூம் செலக்ட் செய்து அதன் பின் முறையான பல கட்டங்கள் இன்டர்வியூ நடத்திய பிறகு e-பாஸ் ஆனது வழங்கப்படும்.

அப்படி வெற்றிகரமாக இந்தியாவில் வேலை பார்த்த நண்பர் சிங்கப்பூரில் பத்தாயிரம் வெள்ளி சம்பளத்துடன் வேலைக்கு சேர்ந்த வெற்றிகரமான கதையின் பின்னணியை தான் நாம் பார்க்கப் போகின்றோம். அதாவது சிங்கப்பூரில் ஐடி ஃபீல்டில் வேலை கிடைப்பதற்கு அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான். அவர் ஏற்கனவே இந்தியாவில் ஐடி துறையில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் அவருடைய ரெஸ்யூமினை முறையாக அப்டேட் செய்து Linked In-ல் அப்லோடு செய்து அவருடைய ப்ரோபைலை 100 சதவீதமாக வைத்தது மட்டுமே அவருக்கு வேலை கிடைக்க முக்கிய காரணமாக அமைந்தது.

முதலில் ரெஸ்யூம் செலக்ட் செய்து அதன் பின்னர் அவருக்கு இரண்டு கட்டமாக இன்டர்வியூ நடத்தப்பட்டது. அவருடைய திறமைகள் பரிசோதித்து பார்த்த பின்பு இறுதியாக சம்பளத்தை பற்றி விவாதித்த பின்னர் அவருக்கு அவர் நினைத்த சம்பளத்தில் வேலை கிடைத்தது. அது மட்டுமல்லாமல் சிங்கப்பூரை பொறுத்தவரை ஆபீஸ் வேலையில் பணிபுரிபவர்களுக்கு குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் மருத்துவ சலுகை ஆகியவையும் வழங்கப்படும்.

அது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் அழைத்துச் சென்று தற்பொழுது சிங்கப்பூரில் வீடு எடுத்து தங்க வைக்கும் அளவிற்கு அவரது பொருளாதார வசதி உள்ளது. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் சிங்கப்பூரில் படிக்க வைத்து குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து வேலை செய்து வருகின்றார். எனவே படித்த இளைஞர்கள் சிங்கப்பூருக்கு வர விரும்பினால் உங்களது அனுபவத்திற்கு ஏற்ற வேலையை Linked In-ல் தேடி உங்களது ரெஸ்யூமனை சரியாக வைத்துக் கொண்டு நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிட்டும்.

Related posts