சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்பும்போது கொஞ்சம் அசந்தால், கமிஷனாக நீங்கள் பெரிய தொகையை இழக்க வேண்டி வரும். கமிஷன் தொகை குறைவாக, அதேநேரம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உங்கள் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்புவது எப்படினுதான் இந்தக் கட்டுரைல நாம பார்க்கப் போறோம்.
சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்புதல்!
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்று வேலை பார்க்கும் பலர், தங்கள் வருமானத்தை இந்தியாவில் இருக்கும் குடும்பத்துக்கு அனுப்பப் பல்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். முதலில் பணம் அனுப்புவதற்கான நடைமுறை என்னவென்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
- சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வங்கிக் கணக்கின் `Wire Transfer’ அல்லது பணபரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் வாயிலாகப் பணத்தை அனுப்ப முடியும். ஆஃப்லைனை விட ஆன்லைன் டிரான்ஸ்பர் பாதுகாப்பானது.
- இந்தியாவுக்குப் பணம் அணுப்ப ஏதாவது ஒரு `Money Transfer’ சேவை வழங்கும் நிறுவனத்தில் பதிவு செய்து ஒரு கணக்குத் தொடங்க வேண்டும். ஏற்கனவே உங்களிடம் அதற்கான கணக்கு இருந்தால் லாக்-இன் செய்துகொள்ளுங்கள். லாக்-இன் செய்து பணம் அனுப்புவதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- நீங்கள் யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ, அவரின் கணக்கு எண்ணை உள்ளீடு செய்து `Beneficiary’-ஆக அந்தக் கணக்கை பதிவு செய்யுங்கள். இதற்காக, நீங்கள் பணம் அனுப்புபவரின் வங்கிக் கணக்கு எண், பெயர், முகவரி போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.
- எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் பணபரிமாற்றத்துக்காக கட்டணம் ஆகியவை பற்றி விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள். இது நீங்கள் தேர்வு செய்யும் `Money Transfer’ நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். பெரும்பாலான நிறுவனங்கள், அதிக பணம் அனுப்பும்போது குறைந்த அளவு கட்டணத்தையே வசூலிக்கின்றன. HDFC Bank மற்றும் QuickRemit போன்றவை நேரடியாக பணம் பெறுபவரின் வங்கிக் கணக்குக்கு விரைவாக பணத்தை அனுப்பிவிடும்.
சிங்கப்பூரில் இருந்து குறைந்த செலவில் பணம் எப்படி அனுப்புவது?
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் இருக்கும் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பும் சேவையை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. பணம் அனுப்பும் விஷயத்தில் இரண்டு முக்கியமான அம்சங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். முதல் விஷயம், எக்ஸ்சேஞ்ச் ரேட். நீங்கள் கொடுக்கும் ஒரு சிங்கப்பூர் டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் எவ்வளவு கிடைக்கிறது என்பது எக்ஸ்சேஞ்ச் ரேட் எனப்படுகிறது. இது `Money Transfer’ சேவை வழங்கும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வேறுபடும். இரண்டாவது, பணம் அனுப்புவதற்கான கட்டணம். சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்பும்போது, அதற்கு எவ்வளவு பணம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பதுதான் இது. இதுவுமே மாறுதலுக்கு உட்பட்டதுதான். அதனால், பணம் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதற்கு முன்பாக இந்த இரண்டு விஷயங்களையும் கருத்தில் கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகருங்கள்.
உதாரணமாக, இந்தியாவில் இருக்கும் வங்கிக் கணக்குக்கு சிங்கப்பூரில் இருந்து மிகக்குறைந்த செலவில் பணத்தை அனுப்ப உதவும் சேவைகளில் முன்னணியில் இருப்பது SingX என்ற வேலைதான், இதில் நீங்கள் பணத்தை அனுப்ப மொத்தமாகவே 1.95 சிங்கப்பூர் டாலர் தான் செலவாகும். இதே சேவையை நீங்கள் United Overseas Bank தரும் வசதியைப் பயன்படுத்தி செய்தால் கிட்டத்தட்ட 78.5 சிங் டாலர்கள் செலவாகும். இது முந்தைய சேவையை விட கிட்டத்தட்ட 40 மடங்கு அதிகமாகும். அதேபோல், Remitly’ மற்றும்Wise’ நிறுவனங்களும் குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கின்றன. பணம் அனுப்பும் முன்னர் இவற்றின் எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் கட்டணம் குறித்து ஒப்பீடு செய்து முடிவெடுப்பது பணத்தை மிச்சப்படுத்தலாம்.
ஏன் ஒப்பீடு அவசியம்?
சிங்கப்பூர் டாலரில் நீங்கள் அனுப்பும் பணத்தை, உங்கள் குடும்பத்தினர் இந்திய ரூபாயாகப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு பண பரிமாற்றத்தின்போதும் அதற்கான ஓப்பீடு செய்வது அவசியம். இல்லையென்றால், மறைமுகக் கட்டணம் என்கிற பெயரில் ஒரு பெரிய தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும். சிங்கப்பூரில் இருக்கும் எல்லா வங்கிகளுமே அதிகமான எக்ஸ்சேஞ்ச் ரேட்டை வழங்குவதில்லை. அதனால், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் அனுப்பும் தொகையை அதிகரிக்க விரும்பும்பட்சத்தில், இந்த ஒப்பீடு ரொம்பவே கைகொடுக்கும். எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் சேவைக் கட்டணம் என இவை இரண்டையும் ஒப்பீடு செய்து பணத்தை அனுப்புகையில் அது உங்களுக்குக் கூடுதல் பலன் கொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய கீழே இருக்கும் தகவல்கள் உங்களுக்கு உதவலாம்…
செலவு குறைவான சேவை – ‘SingX’ மற்றும் ‘Remitly’
வேகமான சேவை – ‘PayPal’
சிறந்த மொபைல் ஆப் – ‘Wise’