ஏன்யா இப்படி? நாங்க ஏன் சிங்கப்பூரு பெண்ணை கல்யாணம் பண்ணப்போறோம்? என்று சொல்லும் நண்பர்களுக்கு ஒரு தகவல்…. அரிச்சுவடி கூட தெரியாமல் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து, திறம்பட வேலையைக் கற்று அப்படியே சிங்கப்பூர் பெண்ணையும் காதலித்து திருமணம் செய்தவர்களின் லிஸ்டை எடுத்தால், ஒரு முழு Long Size நோட் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரி.. விஷயத்துக்கு வருவோம்…
இந்தியாவில், சிங்கப்பூர் குடிமகன்/ நிரந்தர குடியிருப்பாளருடன் திருமணம் செய்துகொள்ளும் போது, சில சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். இத்தகைய திருமணங்களுக்கு, சில சந்தர்ப்பங்களில் அரசின் அனுமதி தேவைப்படலாம்.
நீங்கள் தற்போது சிங்கப்பூரில் Work Permit-ல் பணிபுரியும் ஊழியராக இருந்தாலும் சரி.. இதற்கு முன்பு Work Permit-ல் பணிபுரிந்தவராக இருந்தாலும் சரி.. நீங்கள் சிங்கப்பரின் குடிமகள் அல்லது PR (நிரந்தர குடியிருப்பாளரை) திருமணம் செய்ய விரும்பினால் மனிதவளத் துறையின் (MOM) ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பினும், கீழ்க்கண்ட நபர்கள் MOM-யின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இப்போது EP அல்லது S பாஸ் வைத்திருப்பவர்கள்.
இப்போது பணியில் இல்லை என்றாலும், கடைசியாக EP அல்லது S பாஸ்-ல் சிங்கையில் வேலைப் பார்த்தவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
மனிதவள அமைச்சகத்தின் (MOM) இணையதளம் சிங்கப்பூர் குடிமகன் அல்லது நிரந்தர குடியிருப்பாளரை திருமணம் செய்வதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பிப்பதற்கான (approval to marry) சரியான தளமாகும்.
MOM-யிடம் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க, கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களின் தெளிவான நகல்களை வழங்க வேண்டும். மேலும் அவற்றை 1 zip file-ஆக இணைத்து தொகுக்க வேண்டும்.
திருமணம் செய்ய விரும்புபவர்கள் | சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் |
இப்போது Work Permit-ல் பணிபுரிபவர்கள் அல்லது இதற்கு முன் Work Permit-ல் பணிபுரிந்தவர்கள் | சிங்கப்பூர் குடிமகன் அல்லது PR திருமணம் செய்வதற்கான விண்ணப்பத்திற்கான Declaration படிவம் (இரு தரப்பினராலும் கையொப்பமிடப்பட வேண்டும்) பாஸ்போர்ட் தனிப்பட்ட விவரங்கள் பக்கம் அல்லது பணி அனுமதி அட்டை (Work Permit Card) தற்போதைய அல்லது சமீபத்திய நிறுவனத்தில் பணியாற்றிய கடந்த 6 மாத Pay Slips கல்விச் சான்றிதழ் நீங்கள் எப்போதாவது வேறு பெயரைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைந்திருந்தால், பெயர் மாற்றத்தைச் சான்றளிப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணம் |
இப்படி அனைத்தும் சட்ட முறைப்படி சரியாக இருந்தால், சிங்கப்பூர் பெண்ணை நீங்கள் கண்டிப்பாக திருமணம் செய்ய முடியும்.
சிங்கப்பூரில் திருமணங்களை பதிவு செய்வதற்கு முதன்மையாக பொறுப்பான அமைப்பு திருமண பதிவு அலுவலகம் (Registry of Marriages – ROM) ஆகும். இது சிங்கப்பூரில் திருமணங்களை பதிவு செய்யும் அரசாங்க அலுவலகம். திருமணம் செய்ய விரும்பும் தம்பதிகள் தங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய இந்த அலுவலகத்தை அணுக வேண்டும்.
31 நாட்கள் தங்கியிருத்தல்: இந்த விதி, சிங்கப்பூரின் சட்டப்படி திருமணத்தை முறையாக பதிவு செய்ய, தம்பதிகள் சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. இது திருமணத்தின் நேர்மையை உறுதி செய்வதற்கும், தம்பதிகளைப் பற்றிய தகவல்களை சரிபார்க்கவும் உதவுகிறது.
திருமண பதிவு செய்ய https://www.marriage.gov.sg/ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- தம்பதியினர் குறித்த தகவல்களை சரிபார்க்க: திருமணம் செய்யும் தம்பதியினர் குறித்த தகவல்களை சரிபார்க்கவும், அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தவும் இந்த விதி உதவுகிறது.
- திருமணத்தின் நேர்மையை உறுதி செய்ய: திருமணம் நடைபெறும் நாட்டில் தம்பதியினர் குறிப்பிட்ட காலம் இருந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதன் மூலம், திருமணத்தின் நேர்மையை உறுதிப்படுத்த முடியும்.
திருமண சடங்குகள்: சிங்கப்பூரில் பல்வேறு மத மற்றும் கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்கள் வசிப்பதால், திருமண சடங்குகளை தங்கள் விருப்பப்படி நடத்திக்கொள்ளலாம்.
சிங்கப்பூரின் திருமணம் தொடர்பான சட்ட விதிமுறைகள் அவ்வப்போது மாறலாம். எனவே, திருமணத்தைத் திட்டமிடுவதற்கு முன், சமீபத்திய தகவல்களுக்கு ROM அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.