விஜய் டெலிவிஷன் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து சில தினங்கள் முன்பு வெளியேறினார் வனிதா விஜயகுமார்.
சிவப்பு மனிதன் படப்பிடிப்பில் இருந்த வனிதா அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை அறிக்கையாக பதிவிட்டார்.
விஜய் டீவிக்கும் தனக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட ஒரு சில விஷயங்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எல்லாருமே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஸ்டாராக தான் வந்துருக்கிறோம் ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் அதற்குரிய மரியாதையில் குறைவு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தனிப்பட்ட விஷயங்களுக்கு தவறாக பேசுவது, நெற்றியில் குங்குமம் வைத்தால் உன் புருஷன் யார் என கேட்பது போன்ற பல பிரச்சனைகள் சமூக வலைதளங்களில் தனக்கு நடப்பதாகவும் அதையெல்லாம் பார்த்து வருந்தினால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று பேசப்பட்டு வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டெலிவிஷன்.
அதில் ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா விஜயகுமார் “கண்டஸ்டண்டை கம்பேர் செய்யாதீர்கள்” என்று கேட்க “போட்டி என்றால் கம்பேர் செய்யாமல் எப்படி இருக்க முடியும்?” என காட்டமாக ரம்யா கிருஷ்ணன் பதிலளிப்பது இடம்பெற்றுள்ளது.