TamilSaaga

சன் டீவி சீரியல் நடிகர் Big Boss சீசன் – 5ல் பங்கேற்கிறாரா? எகிரும் எதிர்பார்ப்பு

ஓட முடியாது ஒளிய முடியாது பிக் பாஸ் என்ற வார்த்தைகளை கேட்ட உடனே உங்கள் எதிர்பார்ப்புகள் ஏறத் துவங்கியிருக்கும்.

அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இழுத்துள்ள ஒரு பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதில் கலந்துகொள்ளக் கூடிய போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பலரும் குக் வித் கோமாளி பிரபலங்களான அஷ்வின், சிவாங்கி அல்லது புகழ் போன்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்ற தங்களது ஆசைகளை இணையத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

தற்போது சன் டீவியில் கல்யாணப் பரிசு எனும் சீரியலில் நடிக்கும் பிரபல சின்னத்திரை நடிகர் “ஈஷ்வர்” இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் இந்த போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

Related posts