விஜய் டிவியில் வருடத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மாற்றத்தின் ஒரு அடையாளம் என்றே கூறலாம். காரணம் அந்த வீட்டுக்குள் சென்றவர்களின் வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு மாறிவிடும். இதில் நல்லதும் உண்டு கெட்டது உண்டு. அதிலும் சீசன் 1 ஏகப்பட்ட சர்ச்சைகளை அள்ளிக்கொட்டியது. அதில் கலந்துகொண்ட பலரும் வெளியே வந்தபின்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் கலந்துகொண்டதால் என் வாழ்க்கையே போயிடுச்சு அப்படின்னு புலம்பி தீர்க்கிறார் இயக்குனர் விசுவின் மகனும் நடிகருமான சக்தி. நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வாய்ப்புகளை இழந்து நிற்கிறேன் எனவும் ஆதங்கப்படுகிறார்.
இந்த நிகழ்ச்சியால் தனக்கு சுத்தமாக வாய்ப்புகள் வரவில்லை என்றும் தன்னை கெட்டவனாக காட்டி இமேஜை டாமேஜ் செய்துவிட்டதாகவும் சக்தி கொட்டி தீர்த்துள்ளார். வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்கின்றனர் இணையவாசிகள்.