Optical Illusions: இந்த கடினமான Optical Illusion-ல், மறைக்கப்பட்ட 16 புலிகளைக் கண்டுபிடிக்க ஒரு நிமிடம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். ஆனால், வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 1%
சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. இந்த புகைப்படங்கள் உங்கள் கண்களையும் மூளையையும் ஏமாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் நம் மூளை தானாகவே அர்த்தப்படுத்த முயற்சிக்கும். இந்த செயல்பாட்டில் சில சமயங்களில் தவறுகள் ஏற்பட்டு, நாம் பார்க்கும் விஷயங்களை தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும்.
ஒளியியல் மாயை புகைப்படங்கள் (Optical Illusion), நம் மூளையை குழப்பும் வகையில் காட்சி குறிப்புகளை பயன்படுத்துகின்றன. இதனால் நாம் உண்மையான காட்சியை விட, நம் மூளை உருவாக்கும் காட்சியைப் பார்க்கிறோம். இந்த புகைப்படங்கள் நம் மூளையைத் தூண்டி, அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.இந்த புகைப்படங்களைப் பார்த்து, நாம் புதிய கோணங்களில் சிந்திக்கவும், படைப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
மூளையின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு நபர் பொருட்களை அல்லது படங்களை பார்க்கும் கோணத்தைப் பொறுத்து வித்தியாசமாக பார்க்க முடியும்.
இந்த கடினமான Optical Illusion-ல், மறைக்கப்பட்ட 16 புலிகளைக் கண்டுபிடிக்க ஒரு நிமிடம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். ஆனால், வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 1%
இந்த கடினமான Optical Illusion படத்தில், உள்ள அனைத்து புலிகளையும் 40 வினாடிகளில் கண்டுபிடிக்க நீங்கள் தயாரா? படத்தில் 1, 2 அல்லது 10 புலிகள் மட்டுமல்ல, மொத்தம் 16 புலிகள் பதுங்கி உள்ளன. அவை பல பகுதிகளில் சிறிய உருவத்தில் மறைந்து இருப்பதால், இந்த சவால் மேலும் கஷ்டமானதாகிறது. உங்கள் பார்வை திறனையும் மிதமான அழுத்தத்தையும் பயன்படுத்தி புலிகளை கண்டுபிடியுங்கள்!
டிக் டாக் பயனர் ஹெக்டிக் நிக் சமீபத்தில் தனது ஃபாலோவர்களுக்கு இச் சவாலை வெளியிட்டார். படத்தில் மொத்தம் 16 புலிகள் பதுங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
- தொடர்ச்சியாக பார்வையை மாற்றவும்: ஒரே இடத்தில் கவனம் செலுத்தாமல், படத்தின் ஒவ்வொரு பகுதியையும் கவனமாகப் பார்க்கவும்.
- பின்னணியை கவனியுங்கள்: புலிகள் பின்னணியுடன் ஒன்றி போய் இருக்கும். எனவே, பின்னணியிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் புள்ளிகள் அல்லது கோடுகளை தேடவும்.
- ஒரு சிறிய பகுதியில் கவனம் செலுத்தவும்: முழு படத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க முயற்சிக்காமல், படத்தை சிறிய பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக கவனியுங்கள்.
- வெவ்வேறு கோணங்களில் படத்தை பார்க்கவும்: படத்தை மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக மற்றும் வலமிருந்து இடமாக பார்க்கவும்.
விடை கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷம்! உங்கள் பார்வைத்திறன் மற்றும் மூளை மிகவும் கூர்மையாக இருக்கிறது. விடை கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். இந்த புதிர்கள் நம்மை பொழுதுபடுத்தவும், நம் மூளையை செயல்பட வைக்கவும் உதவும்.
IQ சோதனைக்கு ரெடியா! பென்குயின் கூட்டத்தில் பாண்டாவை 10 நொடியில் கண்டுபிடிங்க!
இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!