TamilSaaga

தமிழ் சினிமாவில் தல-தளபதியின் புதிய அப்டேட்! அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சியில் இருவரின் ரசிகர்கள்!

தமிழ் சினிமா பொருத்த வரைக்கும் ரஜினி கமல்க்கு பின் சிகரத்தில் இருக்கும், நட்சத்திரங்கள்னா தல மற்றும் தளபதி தான்! காலம் காலமாக எம்.ஜி.ஆர் Vs சிவாஜி, ரஜினி Vs காமல்-னு வந்துகிட்டு இருந்த ட்ரெண்டுல கடந்த பல ஆண்டுகளா நிலைத்திருப்பது தல மற்றும் தளபதி தான்.

அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களைக் கொடுக்கும் பெருமை இவர்களை சாரும். இருவருக்கும் தனியாக ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு.

அவங்க இருவரையும் பற்றிய சமீபத்திய அப்டேட்டுகள் இதோ!

துணிவுக்கு அடுத்து தல நடித்து வரும் படம் தான் Good Bad Ugly! இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்குகிறார். மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் தான் இந்த ஆதிக் ரவிச்சந்தர். தல-யின் மிகப்பெரும் ரசிகரான இவர் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததற்காய் கடவுளுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த படத்தின் முதல் லுக்-கை வெளியிடும்பொழுது இப்படி அவர் குறிப்பிட்டுருந்தார். எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளிவந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருந்தாலும், அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஏன் இதுபோல் எந்தவித முன்னறிவிப்புமின்றி முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது என்று ரசிகர்கள் குழம்பியிருந்த நிலையில் அதற்கான பதிலும் படக்குழுவினரிடம் இருந்தே வந்தது.

இந்த அவசரத்திற்கு அஜித் தான் முக்கிய காரணமாம். மே 3-ம் தேதி தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக 3 லொக்கேஷன்களில் கிட்டத்தட்ட 700 பணியாளர்கள் இரவு பகலாக உழைத்ததால் மட்டுமே திட்டமிட்டபடி மே 9-ம் தேதியன்றே முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அப்பொழுது அங்கு பணிபுரிந்த அனைவரும் தல-யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியுள்ளனர். அவரும் அனைவருக்கும் புகைப்படம் எடுத்துக்கொள்ள பொறுமையுடன் ஒத்துழைத்தார். ஆனால் அவரின் புதிய லுக் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிடுமோ என்ற பயத்தில் புகைப்படம் எடுக்க படக்குழுவினர் தடை விதித்தனர். இங்கு தான் தல-யின் sweet side வெளிவந்தது.

இவ்வளவு நாள் கடுமையாக உழைத்தவர்களுக்கு புகைப்படம் எடுக்க தடை போடக்கூடாது என்று முதல் லுக் போஸ்டரை உடனே வெளியிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் தான் சத்தமே இல்லாமல் இந்த படத்தில் முதல் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதால், ஹைதராபாத்திலிருந்து படக்குழு பேக் அப் செய்துள்ளது. 2025 பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததா தளபதி அப்டேட்!

சமீபத்துல தளபதி விஜய் புதியதாக தமிழக வெற்றிக் கழகம் என புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். மேலும் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தார். தற்பொழுது அவர் நடிக்கும் GOAT என்ற திரைப்படமே இவரது கடைசி திரைப்படம் என்பதால் அதன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், தளபதி விஜய், லைலா, ஸ்னேகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இதன் போஸ்டர் மற்றும் ஓரு பாடல் வெளியான நிலையில், மேலும் பல அப்டேட்டுகளை வாரிவழங்கி ரசிகர்களை உற்சாகத்துடனேயே வைத்துள்ளனர் GOAT படக்குழுவினர்.

சமீபத்தில் வெளியான தகவலின்படி இதில் 3 வேடங்களில் விஜய் நடிக்கிறார் என கூறப்படுகிறது. குழம்ப வேண்டாம்! மூன்று காலங்களில் மூன்று வெவ்வேறு மனிதர்களாக இருக்கும்படி இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. TimeTravel Concept தான் இந்த திரைக்கதை எனவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் VFX காட்சிகள் முடிந்த நிலையில் விரைவில் அதற்கான முடிவுகளை எதிர்பார்ப்பதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு போனஸாக இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதன்படி இந்த திரைப்படத்தில் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருந்தது.

ஏற்கனவே விஜய் குரலில் வெளிவந்த “விசில் போடு” பாடல் சக்கைபோடு போட்ட நிலையில் அடுத்த பாடல் எப்பொழுது வெளியாகும் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஜூன் என இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

மேலும் இந்த பாடல் ஜூன் மாதம் விஜய்-ன் பிறந்த நாளன்று வெளியிடப்படும் என பேசப்படுகிறது. ஏனென்றால் ஜூன் 22 தான தளபதியின் பிறந்த நாள். அந்த பாடலும் பாடலைத் தொடர்ந்து செப்டெம்பர் 5-ல் வெளியாகும் படமும் தளபதி ரசிகர்களுக்கு ஆனந்த விருந்தாய் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts