TamilSaaga

அடுத்தடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் இந்தியன் தாத்தா! ஜூலையில் வெளியாகும் இரண்டாம் பாகம்!

1996-ல வெளிவந்து ஒட்டுமொத்த திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்த படம் தான் “இந்தியன்”. இயக்குனர் சங்கர் தான் இந்த இப்படத்தின் இயக்குனர், உலகநாயகன் தான் ஹீரோ. இந்தியன் தாத்தா-னு சொன்னா இன்னமும் தமிழ்நாட்டுல தெரியாத ஆளு இல்ல. அந்த அளவுக்கு இந்த படம் சூப்பர் ஹிட். வயதான சுதந்திரபோராட்ட தியாகி மற்றும் அவரது மகன் என இரு வேடங்களிலும் கமல் கலக்கிவிட்டார். விரல்களை திருப்பி இந்தியன் தாத்தா செய்யும் வர்மக் கலை வித்தை தான் அப்போதைய சிறுவர்களுக்கு ஃபேவரெட்!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்-ன் வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம் என்றே சொல்லலாம். அப்படி பல வெற்றிகளையும் வசூலையும் வாங்கிக் குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க படக்குழுவினர் முயற்சி செய்து, அதன் படப்பிடிப்பு 2017-ல் தொடங்கப்பட்டது.

குறிப்பிட்ட வகையில் இந்த அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே பல தடைகள் வந்தது. படப்பிடிப்பு தலத்தில் விபத்துகள், கொரோனா தொற்று நோய்ப் பரவல் போன்றவை படக்குழுவினரை திணறடிக்கச் செய்தது. இருப்பினும் பல தடைகளைத் தாண்டி இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

வருகிற ஜூலை 12-ல் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்னவென்றால் இது இரண்டு பாகங்களுடன் முடியப் போவதில்லையாம்! மூன்றாம் பாகமும் முனைப்புடன் வருகிறதாம்!

இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இரண்டாம் பாகத்துக்கே இவ்வளவு நாள் ஷூட்டிங் அடுத்து மூன்றாம் பாகத்திற்கு? என்ற கேள்வி எழுந்தால் சற்று பொறுங்கள்!

மூன்றாம் பாகம் முன்கூட்டியே படமாக்கப்பட்டு விட்டதாம்! அட ஆமாங்க இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களின் படப்பிடிப்புகள் ஒன்றாகவே நடத்தப்பட்டு முடிந்ததாம்.

தற்பொழுது இந்த படத்தின் ட்ரைலர் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு ட்ரைலர்களும் ஒன்றாகவே அமைக்கப்பட்டு, இரண்டாம் பாகத்தின் படம் முடியும் வேலையில் மூன்றாம் பாகத்தின் டிரைலரும் இணைக்கப்படும் என்று படக்குழுவினர் கூடியுள்ளனர். முதலில் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வேலைகள் முழு முனைப்புடன் செய்யப்பட்டு வருகிறதாம்.

எண்ணற்ற ஆக்சன் காட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இந்த வருடத்தின் பெரிய எதிர்பார்ப்பு என்றே சொல்லலாம்.

இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் உலகநாயகனுடன் நடிகர் சித்தார்த், S.ஜ்க சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபிசிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

காலாகாலமாய் ப்ரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் சங்கர் இந்த படத்திலும் ப்ரம்மாண்டத்திற்கு குறை வைத்திருக்க மாட்டார். இந்த படத்தின் இசையை இசுயமைப்பாளர் அனிரூத் அமைக்கிறார். இந்த படத்தின் “பாரா” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக  “நீலோற்பம்” என்ற பாடலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து கமல் மற்றும் சங்கர் கொடுத்த நேர்காணல் ஒன்றில் இந்தப் படமானது இரண்டாம் பாகத்திற்கு மட்டும் தான் திட்டமிடப்பட்டதாகவும். ஏராளமான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் எதனையும் நீக்க விரும்பாததால் அதனை மற்றொரு பாகமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து காட்சிகளும் சிறந்த முறையில் படமாக்கப்பட்டுள்ளதால் படத்தின் பாகங்களை நீக்கும்பொழுது அதன் பல உணர்வுகளும் நீக்கப்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவை தாம் எடுத்ததாக கூறியுள்ளார்.

இதைக் குறித்து கமல் கூறுகையில் கதை கேட்கும்பொழுதே இந்த படத்தில் உள்ள இரு கதைக்களங்களும் சிறப்பாக இருந்ததால் தான் தாம் ஒப்புக்கொண்டதாகவும், அதற்க்கு தேவையான காட்சிகள் படமாக்கப்பட்டு இரு பாகங்களாக வெளிவருவது தான் மிக சரியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது கடினமாக இருந்ததா என கேட்கப்பட்டபொழுது நிச்சயம் கடினமாக இருந்தது எனவும், தனக்கு அது மிகவும் சவாலாக அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.

ஜூலை 12-ல் இதன் இரண்டாம் பாகமும், அடுத்த ஆண்டில் இதன் மூன்றாம் பாகமும் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எப்படியோ எதிர்பார்த்தப்படி இந்தியன் தாத்தா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts