TamilSaaga

“தலைவரை சந்தித்து ஆசி பெற்றேன்” : “விருமன்” பட நாயகி அதிதி ஷங்கர் மகிழ்ச்சியோடு வெளியிட்ட ட்வீட்

பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த திரைப்படம் தான் “விருமன்”. 2013ம் ஆண்டு பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான “குட்டி புலி” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தான் முத்தையா. கார்த்திக் கொம்பன், விஷால் நடிப்பில் மருது, கொடிவீரன், தேவராட்டம் மற்றும் புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களை இயக்கியதும் முத்தையா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் மீண்டும் நடிகர் கார்திக்குடன் இணையும் படம் தான் “விருமன்”.

மேலும் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகியாக களமிறங்குறார் அதிதி ஷங்கர். ஆம் நமது பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களின் மகள் தான் அதிதி ஷங்கர். இவருடைய வருகைக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை அதிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட்டில் “கடந்த செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று நமது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றேன்” என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் அதிதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts