நமது சிங்கப்பூரில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, தந்தைக்கு தப்பாமல் பிறந்த திறமைசாலி என்றால் மிகையாகாது. “அரவிந்தன்” படத்தில் தொடங்கிய இவரது இசைப்பயணம், இந்த 2023ம் ஆண்டு வரை நிற்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, காதல் பாடல்கள் இவருக்கான அடையாளம். காதலின் பல்வேறு முகங்களாக பிரிவு, மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், துரோகம், கொண்டாட்டம் என்று அனைத்து ஏரியாவிலும் இவரது பாடல்களுக்கு தான் இளசுகள் மத்தியில் ரெஸ்பான்ஸ் அதிகம்.
அனிருத் இன்றைய 2k கிட்ஸ்-களின் ஃபேவரைட்டாக இருந்தாலும், காதல் ஏரியாவை பொறுத்தவரை 90’ஸ் கிட்ஸ்களின் ஆல் டைம் ஃபேவரைட் யுவன் தான். அதே போல், Beat Songs-களிலும் சார் தான் கில்லி.
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி.. உடையாமல் மோதிக் கொண்டால் காதல்‘ என்ற வரிகளுக்கு, பல இசையமைப்பாளர்கள் இசையமைக்க மறுத்துவிட்டனர். காரணம், அந்த வரிகள் எந்த மெட்டுக்கும் பொருந்தவில்லை என்று கூறி இசையமைக்க முடியாமல் தடுமாறினர். ஆனால், அந்த வரிகளை பார்த்தவுடன் மெட்டை முணுமுணுத்து அதையே ஓகே செய்து, அந்த பாடலை இளசுகளையும் பாட வைத்து ஹிட்டாக்கியவர் என்பது யுவனின் திறமைக்கு ஒரு சிறிய சாம்பிள் எனலாம்.
இந்நிலையில், நமது சிங்கப்பூரில் முதன் முதலாக யுவன் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அக்டோபர் 14ஆம் தேதி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. Entry Ticket-க்கான கட்டணம் S$75 – S$450 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கான டிக்கெட்டை புக் செய்ய, இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.