“ஏ செத்தப்பயலே”… ஏன் இப்படி பண்றிங்க?.. இந்த வார்த்தைகளை யார் சொல்லி நாம் கேட்டாலும் நம் நினைவிற்கு உடனடியாக வருபவர் தான் ஜி.பி.முத்து. டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் அதில் பல லட்சம் பேரால் மிகவும் ரசிக்கப்பட்ட வெகு சில மனிதர்களில் இவரும் ஒருவர். தனிமனிதன் ஒருவன் முயற்சி செய்தால் புகழின் உச்சிக்கே சென்றுவிடலாம் என்பதற்கு முத்து ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பிரபல “Black sheep” நிறுவனம் அளிக்கும் டிஜிட்டல் விருதுகளை முத்து பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சாமானியனுக்கு மக்கள் ஆதரவு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்பதற்கு இவர் போன்ற பல மனிதர்கள் சாட்சியாக உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தனக்கு கிடைத்த புகழும் அதன் மூலம் வந்த பொருளையும் கொண்டு ஜி.பி.முத்து ஒரு Second Hand காரினை வாங்கினார்.
அப்போது ஒரு தனியான நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், எனது பரம்பரையிலேயே முதன்முதலில் கார் வாங்கியது நான் தான் என்று கண்ணீர் மல்க பெருமிதத்தோடு கூறினார். இந்நிலையில் ஜி.பி. முத்து அவர்கள் புதிதாக BMW கார் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பிரபல நடிகை சன்னி லியோன் நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் சில படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.