TamilSaaga

“சிங்கப்பூரில் ஹோட்டல் அறையில் பார்ட்டி” : விதிகளை மீறியதாக 10 பேரிடம் விசாரணை

சிங்கப்பூரில் கடந்த மாதம் ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகக் கூடிய பத்து பேர், பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக போலீஸார் இன்று புதன்கிழமை (நவம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். அவர்களில் ஒருவரான 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இரண்டு பேருக்கு காயம் ஏற்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CNAவின் கேள்விக்கு பதிலளிக்கும் பேசிய சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) 36 நியூட்டன் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ராயல் நிறுவனத்தின் தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறியது. அக்டோபர் 30ம் தேதி ஹோட்டலில் இருந்து உதவிக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் ஒரு அறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

25 வயதான அந்த நபர் கொண்டாட்டத்திற்குப் பிறகு குழுவில் இருந்த மற்ற இருவர் மீது ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், இதனால் காயம் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பெருந்தொற்று பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதாகக் கூறப்படும் ஹோட்டலையும் STB விசாரித்து வருகிறது.

Related posts