சில புகைப்படங்கள் நம் கண்களையே ஏமாற்றிவிடும். அப்படி ஒவ்வொரு முறையும் நம் கண்களை முட்டாளாக்கும் புகைப்படம் இது.
இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த புகைப்படத்தை பகிர்ந்து, அதில் மொத்தம் எத்தனை யானைகள் உள்ளது என்பதை கண்டறியும்படி ட்வீட் செய்துள்ளார். நீர்நிலையில் கூட்டமாக நின்று கொண்டு யானைகள் தண்ணீர் குடிக்கும் புகைப்படம் இது.
இதில், 99 சதவிகிதம் பேர் சொன்ன பதில் தவறாகத் தான் இருக்கிறது. பலரும் 4 யானைகள் இருக்கிறது என்று பதில் அளித்துள்ளனர். ஆனால், அது தவறு.
சிலரோ, கண்களை விரித்து லென்ஸ் வைத்து கூட பார்த்து 6 யானைகள் என்ற பதிலை சொல்கிறார்கள். ஆனால், அதுவும் தவறு தானாம்.
இதன் உண்மையான பதில் 7. ஆம்! இந்த புகைப்படத்தில் மொத்தம் 7 யானைகள் உள்ளன. யார் யாரெல்லாம் 7 என்று கணித்திருந்தீர்களோ, அவர்கள் தங்களுக்கு தாங்களே சபாஷ்! போட்டுக் கொள்ளலாம். இப்படி ஒரு பெர்ஃபெக் ஷாட்டை பெறுவதற்கு, 20 நிமிடங்களில் 1400 புகைப்படங்களை அடுத்தடுத்து வைல்ட் லென்ஸ் இந்தியா எடுத்துள்ளது. எத்தனை யானைகள் இருக்கின்றன என்பதை எண்களோடு விளக்கும் புகைப்படம் இது.
சேலஞ்சிங்கான இந்த புகைப்படத்திற்கு வெறும் 1 சதவிகிதம் பெயரே சரியான பதிலை சொல்லி இருக்கின்றனர்.