TamilSaaga

“Air Suvidha” : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கட்டாயம் Apply செய்யவேண்டும் – எப்படி செய்வது ? முழு விவரம்

அண்டை நாடான இந்தியாவில் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக Air Suvidha என்ற Online படிவம் செயல்முறையில் உள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் இந்தியா சென்றவர்களுக்கு இது நன்கு பரிட்சயமான ஒன்றாக இருக்கும். “ஏர் சுவிதா” என்பது தங்களுடைய சுய அறிவிப்பு படிவத்தை இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் கட்டாயமாக நிரப்ப வேண்டும் என்பதே ஆகும். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு” : எதற்காக? – அமைச்சர் எஸ். ஈஸ்வரன் விளக்கம்

புது தில்லி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் இந்த Air Suvidha படிவத்தில், பயணிகள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

அவர்களுடைய..
பிறந்த தேதி,
பாலினம்,
பாஸ்போர்ட் எண் உட்பட பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள்,
விமானம் இருக்கை மற்றும் விமானத்தின் PNR எண்,
புறப்படும் நாடு,
வந்திறங்கிய தேதி,
சேருமிடத்தின் முழுமையான முகவரி,
சுகாதார நிலையின் சுய அறிவிப்பு,
கடந்த 14 நாட்களின் பயண வரலாறு

ஆகியவை அடங்கியிருக்கும்

ஆன்லைன் மூலம் இந்த படிவத்தை பூர்த்தி செய்யும் போது, ​​பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டின் நகல், புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன் நடத்தப்பட்ட சோதனையின் எதிர்மறையான RT-PCR சான்றிதழ் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும். இந்த ஆவணங்கள் PDF வடிவத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த கோப்புகளின் அளவு 1 MB-க்கும் குறைவாக இருக்க வேண்டும் மற்றும் கோப்பு பெயர்களில் ஹைபன் அல்லது அடிக்கோடினைத் தவிர வேறு எந்த சிறப்பு எழுத்துகளும் இருக்கக்கூடாது.

எனவே முடிந்தால், உங்கள் விமானத்திற்கான விமான நிலையத்தை அடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும், கடைசி நிமிட தாமதங்களைத் தவிர்க்கவும், தொந்தரவின்றி புறப்படுவதை உறுதி செய்யவும்.

இதையும் படியுங்கள் : “காம இச்சை நிறைவேறவில்லை” : இளம் பெண்ணை கத்தியால் குத்தி தப்பிய நபர் – பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இறுதியில் “Submit” என்பதைத் தட்டியதும், படிவம் விமான நிலைய சுகாதார நிறுவனத்திற்கு (APHO) அனுப்பப்படும். விண்ணப்பத்தின் PDF ஆவணம் பயணிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இந்த PDF இந்தியாவிற்கு வந்ததும் விமான நிலையத்தின் APHO கவுண்டரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts