TamilSaaga

“சிங்கப்பூர் Tuas சோதனைச்சாவடி” : மரசாமான்களை ஏற்றிவந்த லாரி – சிக்கியது 3 கிலோ கஞ்சா

சிங்கப்பூரில் துவாஸ் பகுதி சோதனைச் சாவடியில் அதிகாரிகள், ஒரு லாரியில் 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவைக் கண்டுபிடித்ததை அடுத்து அந்த லாரியின் 24 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்று சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் (டிசம்பர் 28) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 20ம் தேதியன்று, அந்த லாரியில் மரச்சாமான்கள் மற்றும் Air Conditionerக்கு தேவையான பொருட்களை ஏத்தி சென்ற நிலையில் ICA அதிகாரிகளால் கூடுதல் சோதனைக்கு அந்த லாரி உட்படுத்தப்பட்டது. அனுப்பப்பட்டபோது, ​​

இதையும் படியுங்கள் : கோவை – சிங்கப்பூர் : வாரம்தோறும் மூன்று நாட்கள் சேவை

இந்த சோதனையின் போது, ​​ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் கருப்பு பிளாஸ்டிக் பையுடன் கூடிய ஒரு டிராக்ஸ்ட்ரிங் பையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு பிளாஸ்டிக் பையில் மூன்று பொட்டலங்கள் இருந்தன, மேலும் ஒவ்வொரு பொட்டலம் தனித்தனியாக அலுமினியத் தகடு மற்றும் வெளிப்படையான பிளாஸ்டிக் கவரில் மூடப்பட்டிருந்தது. அதில் 3.1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா இருந்ததாக நம்பப்படுகிறது என்று ICA தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் “24 வயதான மலேசிய ஆண் ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டு, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (CNB) கூடுதல் விசாரணைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்,” என்று ICA மேலும் கூறியது. மேலும் லாரியில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் S$43,600 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த CNB தெரிவித்துள்ளது. அந்த ஓட்டுநரின் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இப்பொது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கஞ்சா, “சுமார் 440 பேருக்கு, ஒரு வாரத்திற்கு அளிக்கும் அளவிற்கு போதுமானது என்றும் ICA அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் பாதுகாப்பைப் வலுப்படுத்துவதில் நமது எல்லைகள்தான் எங்களின் முதல் ஆயுதம் என்றும் ICA தெரிவித்துள்ளது. “எங்கள் எல்லைகளுக்குள் போதைப்பொருள் கடத்தும் முயற்சிகளைத் தடுக்க CNB உடன் ICA தொடர்ந்து பணியாற்றும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts