TamilSaaga

BIG BREAKING: 10 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கிய சிங்கப்பூர்

ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை சிங்கப்பூர் நீக்கியுள்ளது, அதே நேரத்தில் வரும் நாட்களில் பாதிப்புகள் விரைவாக இரட்டிப்பாகும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 14 நாட்களுக்குள் போட்ஸ்வானா, Eswatini, கானா, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கான Travel History-யுடன் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி முதல் நாட்டின் வகை IV எல்லை (Category IV border measures) நடவடிக்கைகளின் கீழ் வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் (MoH) Omicron மாறுபாட்டின் அதிக பரவும் தன்மையைக் கருத்தில் கொண்டு “விரைவில்” உள்ளூர் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் வேலை.. வெளிநாட்டுப் பெண்ணுடன் கல்யாணம் – தாங்க முடியாத இன்னல்களை அனுபவித்த தமிழ் ஊழியர்

“வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், அதிகமான சமூக (உள்ளூர்) பாதிப்புகள் விரைவாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த வகை கோவிட்-19 உடன் வாழ்வதற்கு மீண்டும் நாம் தயாராக வேண்டும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், புதிய அலையின் உச்சத்தை நாம் மழுங்கடிக்கலாம். மேலும் ஒவ்வொருவரும் தங்களின் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து சுய பரிசோதனை செய்துகொள்வதற்கும், தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்துவதற்கும் தங்கள் பங்கை ஆற்றினால், நமது உடல்நலப் பாதுகாப்பு மீண்டும் பாதிக்கப்படுவதை நாம் தவிர்க்கலாம்” என்று MoH கூறியதாக சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டவர்கள் தங்கள் சமூக தொடர்புகளை குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூர் Marina Bay” : கடலில் மிதந்து வந்த 68 வயது ஆணின் சடலம் – போலீசார் விசாரணை

இந்த 10 நாடுகளுக்கான இணைப்புகளைக் கொண்ட பயணிகள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் (PCR) சோதனையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட வசதியுடன் 10 நாட்கள் தங்கியிருப்பதற்கான சான்றையும் வழங்க வேண்டும். அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் முடிவில் மற்றொரு PCR சோதனை நடத்தப்படும்.

ஓமிக்ரான் தீவிரமடைந்து வரும் நிலையில், சிங்கப்பூர் அரசின் இந்த தடை தளர்வு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், வைரஸ் அதிகமாக பரவிவிடக் கூடாது என்ற அச்சமும் உள்ளூர இல்லாமல் இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts