“தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே..” என்ற பாடல் வரிகள் மட்டுமல்ல நமது வாழ்விலும் நமது தந்தை நமக்கு செய்த நன்மைகளை எண்ணி நாம் பல நாட்கள் கண் கலங்கியிருப்போம். நாம் வளரும்வரும் நம்மை திட்டி தீர்த்தலும், இந்த உலகை நமக்கு கற்றுத்தரும் மிகச்சிறந்த ஆசான் நமது தந்தையாகத்தான் இருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சில சமயங்களில் உடல் உபாதைகள் உள்ள குழந்தைகளுக்காக அவர்களின் தந்தைகள் பல தியாகங்களை செய்யும் செயல்கள் குறித்து நான் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்போம்.
இதையும் படியுங்கள் : மரத்தில் வேகமாக மோதிய SBS Transit, 6 பேருக்கு காயம்
இந்த பதிவிலும் நாம் அப்படிப்பட்ட ஒரு தந்தையை பற்றித்தான் காணவுள்ளோம், கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவைச் சேர்ந்தவர் தான் டெரெக் ப்ரூ. இவருடைய 8 வயது மகனுக்கு உடம்பில் பிறப்பில் இருந்தே நெஞ்சு பகுதியில் ஒரு மிகப்பெரிய மச்சம் போன்ற ஒன்று இருந்துள்ளது. இதனால் நீச்சல் குளத்தில் அந்த சிறுவன் சட்டையின்றி குளிக்க பயந்துள்ளான். பிறரிடமிருந்து தான் வித்தியாசப்பட்டு தெரித்துவிடுமோ என்ற அச்சம் அவனிடத்தில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தனது மகனின் அந்த அச்சத்தை போக்க அவனது உடலில் உள்ளதை போன்றே ஒரு மச்சத்தை “தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”