கடந்த சில நாட்களாக சிங்கப்பூரின் புக்கிட் மேரா வியூவில் பல கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த பகுதியில் உள்ள புக்கிட் மேரா வியூ சந்தை முழுமையாக மூடப்பட்டது. அண்மையில் மேலும் இரண்டு கொரோனா தொற்று குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.
ப்ளாக் 119 மற்றும் 115ல் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் ப்ளாக் 119 நடத்தப்பட்ட முதற்கட்ட கோவிட் பரிசோதனையில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ப்ளாக் 115ல் புக்கிட் மேரா உணவங்காடியில் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் பூட்டுதல் மற்றும் கிருமிநாசி தெளிக்கும் பணிகளுக்கு பிறகு மீண்டும் புக்கிட் மேரா திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மிகப்பெரிய கொரோனா கிருமி தொற்று நோய் பரவல் குழுமமாக கருதப்பட்ட புக்கிட் மேரா சந்தை திறக்கப்பட்டு ஒரு வார காலம் முடிந்த நிலையிலும் அங்கு வியாபாரம் தொடர்ந்து மந்தமாகவே காணப்படுகிறது.
சில கடைக்காரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வழக்கமான வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஈட்டிவருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் சில சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். ஹெண்டர்சன் டவ்சோன் என்ற சமூக நிலையம் 40க்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் மதியம் மற்றும் இரவு உணவை வழங்குகிறது.
மேலும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா அங்கு உள்ள கடைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.