TamilSaaga

சிங்கப்பூரில் தேசிய சின்னமாக்கப்பட்ட “ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்” : ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்

சிங்கப்பூரில் ஆன்மீகம் சார்ந்து மட்டுமே இயங்காமல் சமூகத்துக்கான சேவைகளும் செய்து வரும் சிறப்பு வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple). நம்பர் 15, டேங்க் ரோடு சிங்கப்பூரில் அமைந்திருக்கும் இந்த கோயில் பல சிறப்புகளை வாய்ந்தது..

ஆலய வரலாறு :

இந்த ஆலயமானது 1820 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் குடியேரிய நகர சமூகத்தினரால் 1859ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயிலாகும். சிங்கப்பூரில் வியாபார நிமித்தமாக வந்து குடியேறிய நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்டது இந்த கோயில்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் ஒருங்கிணைந்த சமூக மையமான “One Punggol”

ஆரம்ப கால கட்டத்தில் ரிவர் வேலி, கிளமன்சியு அவென்யூ அருகில் உள்ள குளக்கரையின் அருகில் இருக்கும் அரசமரத்தடியில் ஒரு வேல் மட்டும் வைத்து தண்டாயுதபாணியை வழிபட்டு வந்தனர். பின்பு முருகருக்கு மட்டும் சன்னதி கட்டப்பட்டது. 1878 ஆம் ஆண்டு மீனாட்சி, சுந்தரேசுவரர், விஸ்ணு, துர்கை,பைரவர், இடும்பன் மற்றும் நவக்கிரக சன்னதிகள் கட்டப்பட்டன.

அதற்கு பிறகு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு 75 அடி உயரத்தில் இராஜ கோபுரம், அர்த்த மண்டபம், திருமண மண்டபம் போன்ற பல மண்டபங்கள் அறைகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு இலவச அன்னாதங்களும் முக்கிய நாட்களில் வழங்கப்படுகிறது.

இந்த கோயிலின் பெருமை மிகு சிறப்பு சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது தான். கலாச்சாரம், கட்டிடக்கலை, சமுதாயம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கு முக்கிய சான்றாக இந்த கோயில் விளங்குகிறது. இந்த காரணங்களுக்காகவே தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படதாக அரசு தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts