சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சிங்கப்பூரில் உள்ள மூன்று மின்சார வழங்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். வரும் நவம்பர் 11, 2021 முதல் சிங்கப்பூர் சந்தையில் இருந்து வெளியேறுவதாக iSwitch நிறுவனம் கடந்த அக்டோபர் 13ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 15 அன்று, Ohm Energy நிறுவனமும் சிங்கப்பூர் சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
இறுதியாக, கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று, Best Energy நிறுவனமும் தனது வெளியேற்றத்தை அறிவிக்கும் மூன்றாவது ஆற்றல் விற்பனையாளராக மாறியது. கூடுதலாக, நான்காவது மின்சார சில்லறை விற்பனையாளரான யூனியன் பவர், சுமார் 850 வாடிக்கையாளர்களின் கணக்குகளை மூடுவதாக அறிவித்தது, இருப்பினும் அது சந்தையில் சுமார் 20,000 கணக்குகளின் போர்ட்ஃபோலியோவுடன் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி சிங்கப்பூரின் மின்சார வழங்குநர்களுக்கு என்ன தான் நடக்கிறது? இதற்கான ஒரே பதில் சாதகமற்ற சந்தை நிலைமைகள், உலகெங்கிலும் இயற்கை எரிவாயுவின் விலையில் சமீபத்திய உயர்வால் தான் என்பதே. சிங்கப்பூரின் பெரும்பாலான மின்சாரம் இயற்கை எரிவாயுவில் இருந்து பெறப்படுகிறது, ஆகையால் இந்த மூன்று நிறுவனங்களும் அவர்கள் வெளியேற்றத்தை தவிர வேறொன்றும் செய்ய இயலாது என்பதே அனைவரும் அறிந்த உண்மை. அதே நேரத்தில் பசுமை ஆற்றலை நோக்கிய ஐரோப்பாவின் நகர்வு அவர்களை பாதிப்படையச் செய்துள்ளது.
ஆனால் இது எப்படி சிங்கப்பூரை பாதிக்கிறது?
கடந்த 2018ம் ஆண்டில், சிங்கப்பூர் திறந்த மின்சார சந்தையை அறிமுகப்படுத்தியது, இது நுகர்வோர் மின்சாரம் வாங்கும் போது சில்லறை விற்பனையாளரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஒவ்வொருவரும் தங்கள் மின்சாரத்தை SP குழுமத்திலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டண விகிதத்தில் வாங்க வேண்டியிருந்தது.
தனிநபர் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் மின்சாரத்தை சிங்கப்பூரில் உள்ள ஏழு முக்கிய மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து (gencos) வாங்குகிறார்கள், அவர்கள் எரிசக்திக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். ஜென்கோக்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு அரை மணி நேர அடிப்படையில் மின்சாரத்தை விற்க ஏலம் எடுக்கின்றன, அவர்கள் வெவ்வேறு விலைத் திட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை சிங்கப்பூரில் உள்ள வீடுகளுக்கு விற்கிறார்கள்.
உலகளாவிய இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்து வருவதால், ஜென்கோஸிற்கான எரிவாயு கொள்முதல் விலை அதிகரித்துள்ளது, இதுவே மின்சார விலை உயர்வுக்கு வழிவகுத்தது. இதனால் சந்தையை விட்டு வெளியேற வேண்டிய மூன்று சில்லறை விற்பனையாளர்களால் அதிகரித்த விலையில் மின்சாரத்தை தொடர்ந்து வாங்க முடியவில்லை மற்றும் அவற்றை நிதி ரீதியாக நிலையான முறையில் நுகர்வோருக்கு விற்க முடியவில்லை, இதுவே அவர்களை அவர்களது வணிகத்தில் இருந்து வெளியேற வைத்துள்ளது.