TamilSaaga

திறந்தாச்சு சிங்கப்பூர் எல்லை? : சிறிய அளவிலான கட்டுப்பாடுகளுடன் “இந்தியர்கள்” சிங்கப்பூர் வர அனுமதி

சிங்கப்பூரில், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்குவது உட்பட எல்லை நடவடிக்கைகள் பல தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. அதேபோல இப்போது மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட வகை III நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன.

இது மேற்குறிப்பிட்ட இந்த நாடுகளில் உள்ள பெருந்தொற்று நிலைமையை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் (MOH) இன்று சனிக்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்ட அறிக்கையில் தகவலை தெரிவித்துள்ளது. வரம் அக்டோபர் 26ம் தேதி இரவு 11.59 மணி முதல், வங்கதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயண வரலாற்றைக் கொண்ட பயணிகள், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு மீண்டும் அந்த நாட்டிற்குள் நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் மலேசியா, கம்போடியா, எகிப்து, ஹங்கேரி, இந்தோனேஷியா, இஸ்ரேல், மங்கோலியா, கத்தார், ருவாண்டா, சமோவா, சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, டோங்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் வியட்நாம் ஆகியவை அக்டோபர் 26 இரவு 11.59 மணி முதல் வகை III-ல் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்துதலுக்கான நெறிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

அரசு கூறும் இடங்களில் இல்லாமல் பயணிகள் அவர்களது இடங்களில் தனிமைப்படுத்துதல் உத்தரவை செலவிட அனுமதிக்கப்படுவார்கள். அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல், வகை III நாடுகள் அல்லது பிராந்தியங்களில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்களுக்கான தங்குமிட அறிவிப்பை தங்கள் இடங்களில் செயல்படுத்தலாம். பயணி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தடுப்பூசி நிலை மற்றும் பயண வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இவை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“பயணிகளுக்கு எந்த பிரத்யேக SHN வசதிகளிலும் தங்குமிடம் ஒதுக்கப்படாது” என்றும் MOH தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும் “அவர்களின் SHN தேவைகளை மீறுபவர்கள் அல்லது தவறான அறிவிப்பைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் MOH கூறியுள்ளது. அதே நேரத்தில் வகை IV நாடுகளிலிருந்தும் பிராந்தியங்களிலிருந்தும் வரும் பயணிகள் தங்கள் 10 நாள் தங்குமிட அறிவிப்பை தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் கழிக்க வேண்டும்.

நவம்பர் 1ம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்பே தடுப்பூசி முழுமையாக போடப்பட்டிருந்தால் தேவையான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாடு அனுமதிக்கும் என்று அதிகாரிகள் முன்பு அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts