TamilSaaga

“உயரத்தில் இருந்து விழுந்து இறந்த நபர்” : தாய் முன்வைத்த புகார் – இதுதான் நடந்தது, சிங்கப்பூர் CNB விளக்கம்

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு உயரத்தில் இருந்து விழுந்து இறந்த 17 வயது நபர் விசாரணையின் போது “முறையாகவும் நியாயமாகவும்” நடத்தப்பட்டார் என்று மத்திய போதைப்பொருள் பணியகம் (CNB) நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அவர் லாக்-அப்பில் இருந்தபோது “தவறாக நடத்தப்படவில்லை” என்று விசாரணை முடிவுகள் காட்டுகின்றன.

ஜஸ்டின் லீ என CNB ஆல் அடையாளம் காணப்பட்ட அந்த நபர் கடந்த பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து செப்டம்பர் 16ம் தேதி அவர் ஒரு உயரனமான இடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து CNB, ஜஸ்டினுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஆய்வு செய்ய தொடங்கியது. மேலும் இறந்தவரின் அவரது தாயார் திருமதி சிசிலியா ஓ, விசாரணையின் போது தனது மகன் தவறாக நடத்தப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

இந்த மாத தொடக்கத்தில், அவர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே சண்முகத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தை பகிரங்கப்படுத்தினார். அதில் அவர் தனது மகன் எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி எழுதியிருந்தார். இந்த சூழலில் CNB தனது விசாரணையின் முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது, டீன் ஏஜ் மரணத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட நச்சுயியல் சோதனைகளில் அவரது சிறுநீர் மற்றும் இரத்தத்தில் LSD மற்றும் நைட்ராசெபம் ஆகியவற்றின் தடயங்கள் கண்டறியப்பட்டன. LSD என்பது மருந்துகளின் தவறான பயன்பாடு சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட ஒரு வகை A மருந்து என்பது நினைவுகூரத்தக்கது.

பிரேத பரிசோதனையில், உயரத்திலிருந்து விழுந்ததால் பல காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என்றும் முடிவுகள் தெரிவித்தன. CNB, இந்த முடிவுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பிரேத பரிசோதனையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினர்.

Related posts