TamilSaaga

“சிங்கப்பூரில் 23 வயது நபர் பெருந்தொற்றுக்கு பலி” : தொற்று பாதிப்பால் மேலும் 15 பேர் மரணம்

சிங்கப்பூரில் 23 வயது நபர் ஒருவர் பெருந்தொற்றல் இறந்துள்ளது நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவில் இதுவரை பதிவான பெருந்தொற்று மரணங்களில் இதுவே மிகக்குறைந்த வயது கொண்ட இறப்பாகும். மேலும் வைரஸ் காரணமாக தீவில் 15 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 14) நிலவரப்படி 2,932 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்களில் எட்டு ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவர். மேலும் பதிவான இறப்புகளில் ஓரளவு தடுப்பூசி போடப்பட்ட 23 வயது நபர் மற்றும் தடுப்பூசி போடப்படாத 34 வயதான ஒருவரும் அடங்குவர். இருவருக்கும் பல அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன என்று MOH தெரிவித்துள்ளது. இறந்த மற்ற 13 நபர்கள் 60 முதல் 89 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 8 பேர் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை. மேலும் ஐந்து பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய வழக்குகளில், 2,929 நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் பரவுகின்றன, இதில் சமூகத்தில் 2,412 மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் 517 உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்று நேற்று இரவு 11.15 மணிக்கு வெளியிட்ட ஊடக அறிவிப்பில் MOH தெரிவித்தது. இதுவரை நாட்டில் 1,38,327 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,511 நோயாளிகள் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர், பெரும்பாலும் லேசான கண்காணிப்புக்காக மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. இவர்களில், 310 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படுகிறது மற்றும் 46 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

Related posts