TamilSaaga

‘பலர் பயனடைவர்; – ஆகஸ்ட் முதல் செயல்பட தொடங்கும் Thomson East-Coast ரயில் சேவை

நோய் பரவல் காரணமாக பணிகள் தாமதமான நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் தாம்சன் ஈஸ்ட்-கோஸ்ட் (Thomson East-Coast) ரயில் சேவை தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஸ்ப்ரிங் லீப், அப்பர் தாம்சன் மற்றும் கேல்டகாட் உள்பட ஆறு நிலையங்களை நிலப்போக்குவரத்து ஆணையம் SMRT ரயில் நிலையத்திடம் ஒப்படைத்தாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாட்டில் நோய் பரவல் காரணமாக இந்த 6 நிலைய வேலைகளும் தாமதமானது, இரு முறை நிறுத்தியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் மாத இறுதியில் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளது.

சிங்கப்பூர்னுடைய பொதுப்போக்குவரத்து கட்டமைப்பு என்பது அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும். அனைத்து பயணிகளும் எளிய முறையில் மிக சுலபமாக பயணிக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ வேண்டும் என்பதே எங்களது இலக்கு, அதை தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை நிச்சயம் பிரதிபலிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

மேலும் இன்று கேல்டகாட் நிலையத்திற்கு சென்றிருந்த அமைச்சர், சிங்கப்பூர் பார்வையற்றோர் சங்கம் மற்றும் லைட் ஹவுஸ் பள்ளி ஆகியவற்றுக்கு அருகாமையில் ரயில் நிலையம் இருப்பதை சுட்டிக்காட்டினார். அங்கிருந்து வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி, ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் சிங்கப்பூரில் அதிகமான குடும்பங்களுக்கு இந்த MRT நிலையம் வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 1லட்சம் குடும்பங்கள் பலன் அடையும் என்றார் அவர்.

Related posts