இந்த ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரின் தஞ்சோங் பகர் சாலையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறுவப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 8) வெளியிட்ட தெரிவித்துள்ளது. சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளான பிப்ரவரி 13 ஆம் தேதி, விடியற்காலையில் நடந்த தீ விபத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக LTA தெரிவித்துள்ளது. சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கடைவீதியில் வேகமாக வந்த BMW வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்த காலி கடைை ஒன்றின் மீது மோதி தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரும் தீயில் கருகி இறந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கூடுதலாக சாலை தடுப்பான்கள் பயன்படுத்தப்படும் என்று LTA தெரிவித்துள்ளது. தஞ்சோங் பகர் சாலை மற்றும் டிராஸ் இணைப்பு இடையேயான சந்திப்பில் போக்குவரத்து விளக்குகள் மற்றும் பாதசாரி கிராசிங்குகளும் நிறுவப்பட்டுள்ளன. மேலும் விபத்து நடந்த அந்த பகுதியில் அமலாக்க மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை முடக்கி வைத்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குறிப்பிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பார்க்கிங் செய்வது, மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை பார்க்கிங் செய்வதால் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் ஆரம்ப நிலையில் சிரமங்களை மேற்கொண்டதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். இந்த இடத்தில் வண்டியை வேகமாக இயக்குவது சிரமமான காரியம் என்றும். இருப்பினும் இரவு நேரங்களி வாகனங்களின் பலத்த எஞ்சின் சத்தங்களை தான் கேட்டு உள்ளதாகவும் அந்த பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் கூறியுள்ளார்.