சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதிக்கு பிறகு இங்கு கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது மேலும் இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று சுமார் 100 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். “அப்போதிருந்து, இது மிகவும் செங்குத்தான வளைவில் உயர்ந்து வருகிறது என்றும் திரு. ஓங் கோவிட் -19ஐ சமாளிக்கும் அமைச்சக பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில், பணிக்குழுவின் இணைத் தலைவர் திரு ஓங், கோவிட் -19 பரிமாற்ற அலைகள் என்றென்றும் நிலைக்காது என்றும், எண்கள் வீழ்ச்சியடைந்து நிலைபெறுவதற்கு பொதுவாக 30 முதல் 40 நாட்கள் எடுக்கும் என்றும் கூறினார்.
இருப்பினும், அந்த காலகட்டத்தில், தினசரி வழக்குகள் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இரட்டிப்பாகும் – அதாவது சிங்கப்பூர் நான்கு முதல் ஐந்து இரட்டிப்பு சுழற்சிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று திரு ஓங் கூறினார். நாடு இப்போது ஒரு நாளைக்கு 400 முதல் 800 வரை வழக்குகளை இரட்டிப்பாக பெற்று வருகின்றது என்று அவர் கூறினார்.
அதைத் தாண்டி, ஐந்து இரட்டிப்பு சுழற்சிகளின் அடிப்படையில், அதாவது தினசரி வழக்குகள் 800 முதல் 1,600 மற்றும் 1,600 முதல் 3,200 வரை இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உள்ளது. கீழே வந்து நிலைபெறத் தொடங்கும் முன் உச்சத்தை எட்டும் என்று அவர் கூறினார். இது நடக்குமா இல்லையா என்பது இங்குள்ள அனைவரின் கூட்டு நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று அமைச்சர் கூறினார்.