சிங்கப்பூரில் Buangkok பகுதியில் முகத்தில் முகமூடி அணிந்து நிர்வாணமாக சாலையில் தோன்றிய 51 வயது நபர் கைது செய்யப்பட்டு மேற்கொண்ட மதிப்பீட்டிற்காக அருகில் உள்ள மனநல நிறுவனத்திற்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடைபாதையில் ஒரு நிறுவனமான நபர் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
கடந்த மாதம் ஆகஸ்ட் 16ம் தேதியன்று மாலை 5:20 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. வீடியோவில் உள்ள அந்த நபர் தொகுதி 986 C புவாங்காக் பிறை அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்வது தெரிந்தது. மேலும் ஆடையின்றி சென்ற அந்த ஆடவர் முகமூடி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் “ஆகஸ்ட் 16, 2021 அன்று மாலை 5:20 மணியளவில், பிளாக் 981 புவாங்காக் கிரசெண்டில் ஒருவர் நிர்வாணமாக நடமாடும் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதர குற்றங்கள் (பொது ஒழுங்கு மற்றும் தொல்லை) சட்டத்தின் பிரிவு 27A (1) (a) இன் கீழ் பொது இடத்தில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த 51 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மேல் மதிப்பீட்டிற்காக IMHக்கு (Singapore Institute of Mental Health) அனுப்பப்பட்டார். தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று கூறியது.