TamilSaaga

“சிங்கப்பூர்.. செப்டெம்பரின் முதல் பாதி – “மழை கம்மியாத்தான் இருக்கும்” – தமிழ் சாகா சிங்கப்பூரின் Exclusive காணொளி உள்ளே

நமது சிங்கப்பூர் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு ஈரப்பதம் வாய்ந்த (மழை அதிகம் பெய்த) ஒரு ஆகஸ்ட் மாதத்தை அனுபவித்ததாகவும். மேலும் இந்த செப்டம்பர் மாதத்தின் முதல் பாதி மழை குறைவாக இருக்கும் என்று MET (Meteorological Service Singapore) சர்வீஸ் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 1) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1980ம் ஆண்டுக்கு பிறகு நமது இந்த தீவு அனுபவிக்கும் மிகவும் ஈரப்பதம் வாய்ந்த ஆகஸ்ட் மாதமாக கடந்த ஆகஸ்ட் 2021 இருந்தது. மாதாந்திர மொத்த மழையளவு சுமார் 426.2mm என்றும் MET சர்வீஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் தற்போது பெய்து வரும் மெல்லிய மழையின் அழகிய காட்சி – தமிழ் சாகா சிங்கப்பூரின் Exclusive காணொளி

சிங்கப்பூரின் சாங்கி வானிலை நிலையத்தில், கடந்த மாதம் மொத்தம் 24 நாட்கள் அதிக மழை பெய்த நாட்களாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது இயல்பாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் 14 நாட்களை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 24ம் தேதி அன்று, தீவின் சில இடங்களில் அதிகாலை முதல் காலை வரை பரவலாக மிதமான மற்றும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது, பின்னர் பிற்பகலில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி அதிகபட்சமாக 247.2mm மழை Mandaiயில் பதிவானது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related posts