சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் கடற்கரை பூங்காவில் ஒரு இந்திய குடிமக்களின் குடும்பத்தை நோக்கி ஆக்ரோஷமான கருத்துகளை தெரிவித்த இந்திய சிங்கப்பூரர் ஒருவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) வெளியிட்ட அறிவிப்பில் CNA நிறுவனத்திடம் போலீசார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
47 வயதான அந்த நபர், தொந்தரவு மற்றும் மற்றவர்களின் இன உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வார்த்தைகளை பேசியதற்காக தற்போது போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
கடந்த மே மாதம் 2ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை முதன்முதலில் மதர்ஷிப் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்த ஒரு காணொளியையும் அந்த நிறுவனம் வெளியிட்டது. அந்த வீடியோவில், 47 வயது முதியவர் இன்னொருவரை நோக்கி கத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர் முகமூடி அணியவில்லை என்றும் சமூக இடைவெளி விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும் அவர் இது எனது நாடு என்றும் “நீங்கள் தான் வைரஸை பரப்புகிறீகள்” என்று அந்த ஆடவர் பேசினார். பொதுத் வெளியில் தொல்லை தரும் குற்றத்திற்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.